உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கை; 3வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கை; 3வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 3வது நாளாக, இன்று (ஆகஸ்ட் 03) தொடர்ந்து வரும் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கையில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம் ராணுவத்துக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. நம் ராணுவத்தினருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், காஷ்மீர் போலீசார் இணைந்து, 'ஆப்பரேஷன் அகல்' என்ற பெயரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, ஸ்ரீநகர் அருகே டச்சிகாம் தேசிய பூங்கா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென நம் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நம் வீரர்களும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். இவர்கள் டி.ஆர்.எப்., அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 03) 3வது நாளாக, ராணுவ தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அசோகன்
ஆக 03, 2025 15:57

11 வருடங்களுக்கு முன் தீவிரவாதிககளை அன்போடு லக்சரி வண்டியில் அழைத்து போய் 5 ஸ்டார் அளவுக்கான வசதி ஜெயிலில் செய்து கொடுத்தோம்...... அப்புறம் நாட்டை அடகு வைத்தவர்கலின் பிறந்தநாளில் கைநிறைய பணம் கொடுத்து அனுப்பிவைத்தோம்.......... மோடிஜி வந்ததுமே அந்த பயல்களை அங்கேயே போட்டு தள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது.......


பேசும் தமிழன்
ஆக 03, 2025 21:38

அப்போது இருந்தது கான் கிராஸ் கட்சியை சேர்ந்த போலி கும்பலை சேர்ந்த ஆட்சி ......அவர்கள் அப்படி தான் செய்வார்கள் ....தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் நமது ராணுவ வீரர்கள் கைகளை கட்டிப்போட்டு விட்டு .....தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலையை எப்போதும் எடுத்தார்கள்.


Ramesh Sargam
ஆக 03, 2025 11:55

3வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை. இப்படி செய்தி வந்தால் படிப்பதற்கு மகிழ்ச்சி. அதைவிட்டு தீவிரவாதிகளை கைது செய்தோம், பயங்கரவாதிகளை கைது செய்தோம் என்று செய்தி வந்தால் படிப்பதற்கு ஒரு ஆர்வம் வரமாட்டேனென்கிறது.


S.L.Narasimman
ஆக 03, 2025 11:40

நமது இராணுவவீரர்களின் வீரத்திற்கு வாழ்த்துக்கள்


Oviya vijay
ஆக 03, 2025 10:38

முதலில் இங்கிருந்து அவர்களுக்கு ஆதரவுட தரும் துரோகிகளை கருவறுக்க வேண்டும்


vivek
ஆக 03, 2025 11:52

கருத்து போடுறேன்னு நீயே மாட்டிக்க போற....


பேசும் தமிழன்
ஆக 03, 2025 10:16

இந்த நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.... அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.. அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை..... வாழ்த்துக்கள்.... ஜெய்ஹிந்த்.


முக்கிய வீடியோ