உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.இது குறித்து போலீஸ் கமிஷனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது; மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த ஒரு தம்பதி அலம்பாக் காவல்நிலையத்தில், தனது 3 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும், குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது, சுமார் 3 மணியளவில் வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஒரு நபர் வருவது தெரிய வந்தது. அந்த நபர் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிக் கொண்டு சென்றான். அந்த ஸ்கூட்டரின் நம்பரை வைத்து, குற்றவாளி 26 வயதான தீபக் வர்மா என்பது அடையாளம் காணப்பட்டது. தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து வந்துள்ளான். குற்றவாளி தீபக்கை பிடிக்க போலீசார் சென்ற போது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த தீபக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான், எனக் கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

sasikumaren
ஜூன் 07, 2025 05:42

மூன்று வயதில் ஒரு சிறுமி என்று சொல்லுவது மிக தவறு மூன்று வயதில் ஒரு குழந்தை என்று சொல்வது தான் சரி ஒரு குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லுவதே மிகவும் வேதனைக்குரியது ஆனால் தண்டனையில் நிமிடத்தில் அவனுக்கு தண்டனை கிடைத்து விட்டது வாழ் நாள் தண்டனை அந்த குழந்தைக்கு தான் அந்த குழந்தை சீக்கிரம் நலம் பெற வேண்டும் தெய்வமே.


Padmasridharan
ஜூன் 06, 2025 21:07

தண்ணீர் கேன் போடும் வேலையை பார்த்ததனால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக்கொலை அதே பெரிய இடமாக இருந்தால் பணம் வாங்கி குற்றத்தை மறைச்சிருப்பாங்க. தண்ணீர் கேன் போடறவன்கிட்ட துப்பாக்கி எப்படி இருந்தது சாமி, காவலர்களுக்கே வெளிச்சம்


N Sasikumar Yadhav
ஜூன் 07, 2025 09:22

எல்லோரையும் உங்க கோபாலபுர எஜமான் மாதிரியே நினைக்காதீர் . விசாரணை நாட்கள் அதிகமாக இருந்தால் யார் அந்த சாரு என தெரிந்து விடுமென்பதால் விசாரணை விரைவாக நடத்தி முடித்துவிட்டு தண்டனை கொடுத்து விட்டார்கள். மேல்விசாரணைக்கு பரிந்துரை செய்து யாரு அந்த சாருனு கண்டுபிடிக்க வேண்டும் ஆனால் தங்களுடைய முகத்திரை கிழியுமென்பதால் திராவிட மாடல் மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டானுக . யாரு அந்த சாரு


சிட்டுக்குருவி
ஜூன் 06, 2025 19:30

நாட்டில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் உணவு ,உடை ,உறங்கும் கூரை அடிப்படை உரிமையாக்கபட வேண்டும் .நாடு முழுவதிலும் மக்கள் ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில், சாலை ஓரங்களிலும் படுத்து உறங்குவதையும் அதனால் குற்றங்களுக்கு ஆளாவதையும் பார்க்கின்றோம் .ரயில் பிளாட் பாரத்தில் தூங்கும்போது குழந்தைகளை கடத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது இது முதல் கிடையாது .ஏற்கனவே இதுபோன்ற செய்திகள் பார்த்திருக்கின்றோம். இதுவே கடைசியாக இருக்க ஆவண செய்ய நாட்டில் உள்ள மாநில அரசுகள், மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து மதிய அரசு வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கூட்டு வாழ்விடங்களை அமைத்து தர முன்வரவேண்டும். நாட்டில் உள்ள பணம் மிகுதியாக ஈட்டும் வழிபாட்டுத்தலங்களும் ஒருபகுதி வருமானத்தை இதற்க்கு செலவிட முன்வரவேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதியும் திருப்பதியில் மட்டும் இல்லாமல் நாடுமுழுக்க தங்கள் சேவையை விரிவாக்க வேண்டும் .அப்போதுதான் நாடு சுபீட்ஷமானதாக கருதப்படும். ஈதல் இசைபட வாழ்தல் .யாரோ ஒருவர் இதை முன்னெடுத்துசெய்தால் ஈவதற்ற்கு கோடான மக்கள் சேர்வார்கள் .நானும்தான் .


spr
ஜூன் 06, 2025 17:58

இது பாராட்டத்தக்க செயல் ஒரு வேளை இது போன்ற செயல்பாடுகளில் சில நேரம் குற்றம் செய்யாதவர்களும் கூட காவற்துறையின் அலட்சியத்தால் சுடப்படலாம். ஆனாலும் இனி வரும் காலத்தில், "ஒரு குற்றவாளி தப்பிப்பதைத் தடுக்க, குற்றம் செய்யாதவர்கள் சிலர் சில சமயங்களில் தண்டிக்கப்பட்டாலும் சரி" என்ற நிலை உருவாகலாம் அதனால் உயிர் போகும் என்ற அச்சத்தால் குற்றங்கள் குறையும் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுவது குறையும் சிறைச்சாலைகள் அதன் செலவீனங்கள் குறையும் அதற்கு மாநில ஆளும் கட்சி உதவ வேண்டும் தமிழகத்தில் "இந்த நாளும் வந்திடாதோ?" என்று இன்றைய நிலை பாடச் சொல்கிறது


venugopal s
ஜூன் 06, 2025 17:33

உத்தரப் பிரதேசத்தில் நடந்தால் மாநில அரசை பாராட்டுவோம், தமிழகத்தில் நடந்தால் போலீஸ் அராஜகம் என்று வசை பாடுவோம்!


Mohan
ஜூன் 06, 2025 18:08

யார் அந்த சார் ...கோவாலு ....இது டுமிழ்நாடு ஸ்டைல் ..UP ல உண்மையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை ..ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு கோவாலு


theruvasagan
ஜூன் 06, 2025 20:07

ஞானசேகரன்களுக்கு வால் பிடித்தால் அப்படித்தான் சொல்லுவார்கள்.


D Natarajan
ஜூன் 06, 2025 16:55

சரியான முடிவு, தீர்ப்பு. கோர்ட்டுக்கு போனால் கபில் சிபல் குற்றவாளிக்காக வாதாடுவார் . இதே போல் அதிரடி நடவடிக்கை தேவை. தமிழ் நாட்டில் , வேதனை. TN போலீஸ் ஜோக்கர் போலீசாக மாறிவிட்டது


D Natarajan
ஜூன் 06, 2025 16:55

சரியான முடிவு, தீர்ப்பு. கோர்ட்டுக்கு போனால் கபில் சிபல் குற்றவாளிக்காக வாதாடுவார் . இதே போல் அதிரடி நடவடிக்கை தேவை. தமிழ் நாட்டில் , வேதனை. TN போலீஸ் ஜோக்கர் போலீசாக மாறிவிட்டது


sasidharan
ஜூன் 06, 2025 16:54

தமிழ்நாட்டிலும் இது போல் செய்பவர்களை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும் , இதற்கு ஆட்சி மாற்றம் நிச்சயம் தேவை.


Narayanan
ஜூன் 06, 2025 16:37

பாலியல் குற்றங்களுக்கு போலீஸ் , வழக்கு, நீதிமன்றம் இதெல்லாமே காலம் கடத்தும் நிலை . ஆகவே என்கவுண்டர் ஒன்றுதான் சரியான தீர்வு .


r.thiyagarajan
ஜூன் 06, 2025 16:21

Well advanced and tracked by cctv footage and killed directly this is the rule needed all over india …


சமீபத்திய செய்தி