உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி வகுப்பறை கட்டுமான மோசடி: 300 வங்கி பாஸ்புக்குகள் பறிமுதல்

டில்லி வகுப்பறை கட்டுமான மோசடி: 300 வங்கி பாஸ்புக்குகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முந்தைய அரவிந்த் கெஜ்ரி வால் தலைமையிலான ஆம் ஆத்மி காலத்தில் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிதிச்சுமை

கடந்த 2015 - 23ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 12,748 வகுப்பறைகள் கட்ட 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2,405 வகுப்பறைகளுக்கான தேவையிருந்த நிலையில், 10,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படுவது, அரசுக்கான நிதிச்சுமை என குற்றச்சாட்டு எழுந்தது. கூடுதல் வகுப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யப்பட்டதாக, 2019ல் டில்லி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் பா.ஜ., புகார் அளித்தது. இந்த திட்டம், ஆம் ஆத்மிக்கு நெருக்கமான 34 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை, கடந்த 18ம் தேதி, டில்லியில் 37 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், போலி வங்கி கணக்குகள், போலி ரசீதுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

லஞ்சம்

இது குறித்து, அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை: டில்லியில் 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் இருந்து, ஆம் ஆத்மி ஆட்சியில் இயற்றப்பட்ட அரசு கோப்புகள், சட்டப்பூர்வ பரிவர்த்தனைகள் என்ற போர்வையில் அரசு நிதியை திருப்பிவிட பயன்படுத்தப்படும் போலி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட 322 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பொருட்கள் கொள்முதல் செய்தது தொடர்பான போலி ரசீதுகள், போலி நிறுவனங்கள் பெயரில் 'லெட்டர்பேட்'கள், அதிகாரிகள் பெயரிலான அரசு முத்திரை அடங்கிய ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. வகுப்பறை கட்டுமானத்திற்காக, ஒரு சில தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.mohanraj raj
ஜூன் 21, 2025 19:46

படித்த திருடன்


Azar Mufeen
ஜூன் 21, 2025 08:45

அய்யா பிஜேபி கவுன்சிலர்கள் 6000கோடிகள் ஊழல் செய்தார்களே எப்போ வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்படுவார்கள், இங்கே டி எம் கே, வை அமர்த்தியதால் மக்கள் தலையில் அடிப்பதைப்போல், அங்கே பிஜேபியை அமர்த்தி தலையில் அடித்துக்கொள்கிறார்கள்


Iyyangar, Sydney
ஜூன் 21, 2025 12:28

assarன் பூர்வீகத்தை சோதனை செய்து வங்காள தேசம் அனுப்ப வேண்டும்


Indhuindian
ஜூன் 21, 2025 07:54

சட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சவால் இந்திய குற்ற சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவிலாவது இவரியோ இவருடைய தொடப்பக்கட்டை கட்சி சின்னத்தை sonnom கட்சியோ குற்றம் செய்யாமல் இருந்திருக்கிறார்கள் என்று கண்டு இடித்தால் உங்களுக்கு பட்டம் இனாம் இனாம்


Kasimani Baskaran
ஜூன் 21, 2025 07:40

ஊழலுக்காக ஒரு நோபல் பரிசை அறிவித்தால் அதில் திராவிட மன்னர்களுக்கே கூட டப் கொடுப்பாப்ல...


Thravisham
ஜூன் 21, 2025 06:45

கெஜ்ரி ஓர் போர்ஜ்ரி


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 21, 2025 05:16

ஊழலில் திராவிட ஆட்களியே மிஞ்சும் சாதனை.


Thravisham
ஜூன் 21, 2025 06:47

திருட்டு த்ரவிஷன்கள் ஊழல் டாக்டரேட் பட்டம் வாங்கியவர்கள்


சமீபத்திய செய்தி