உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே கூட்டமைப்பில் இணையும் 32 லட்சம் கோவில்கள்!

ஒரே கூட்டமைப்பில் இணையும் 32 லட்சம் கோவில்கள்!

புதுடில்லி: உலக அளவில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, திருப்பதியில் பிப்.,17 முதல் 19 வரை மாநாடு நடக்கிறது.முன்னெப்போதும் இல்லாத ஒரு முயற்சியாக, உலக அளவில் உள்ள பிரபலமான 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களுக்கான சுற்றுலா சந்தை மதிப்பு ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய். இத்தகைய வருவாய் ஈட்டக்கூடிய ஆன்மிக சுற்றுலாவை ஒரே நெட்வொர்க் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.இது மக்கள் எளிதான முறையில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோவில்களை அணுகுவதை உறுதி செய்யும். இது தொடர்பாக, சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை திருப்பதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஐ.டி.சி.எக்ஸ் 2025 மாநாடு ஹிந்து ,சீக்கிய, பவுத்த மற்றும் ஜெயின் ஆன்மிக நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலகளவில் ஆன்மிக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் 32,000 முதல் 40,000 யாத்ரீகர்கள் வருகிறார்கள். இது தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் 10,000 முதல் 15,000 வரை இருந்தது.அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு தினமும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வருகை தருகின்றனர். இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை விட அதிகமாகும்.கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு தினசரி 6,000 முதல் 7,000 வரை பக்தர்கள் வருகின்றனர். இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய காலக்கட்டத்தில் 4,000 ஆக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதம் வளர்ந்து அடைந்து வருகிறது.இதனால் மக்களுக்கு எளிதான முறையில் பயணம் மேற்கொள்ள, உலக அளவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர வேலை நடந்து வருகிறது. கூட்டமைப்பில் இடம் பெறும் கோவில்களில் பெரும்பகுதி இந்தியாவில் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Bala
பிப் 13, 2025 20:41

குடும்ப கொத்தடிமை தலைவரின் மைண்ட் வாய்ஸ். அப்போ நாங்க இனிமேல் கோவில்களில் கொள்ளையடிக்க முடியாதா? அப்போ நாங்கள் தீக தற்குறிகளை வைத்து இந்த கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கைவிடுவோம். திமுக தொண்டன் மைண்ட் வாய்ஸ். பெரியாரையே மண்ணுன்னு சொல்லி ஜோலிய முடிச்சிட்டானுவோ, தீக வாய தொறந்தாலே நம்ம சீமான் அண்ணா வாயிலேயே போடறாரு. இதுல இவனுங்கல நம்பி பிரயோஜனம் இல்ல


Nagraj Muthiah
பிப் 13, 2025 16:13

இப்பதான் ஆரம்பிக்கிறாங்க உடனே தடையா


Sampath Kumar
பிப் 13, 2025 15:47

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கூட்டமைப்பு ஒரே சுருட்டு ஒரே ஜமாய் தான் போங்க


Suppan
பிப் 13, 2025 16:09

உ. பி., க்களுக்கு சுருட்டுவதைத்தவிர வேறெதுவும் தெரியாது


vivek
பிப் 13, 2025 16:49

உண் திருட்டு திராவிட கும்பலுக்கு ஆப்பு டோய் சம்பத்து


N.Purushothaman
பிப் 13, 2025 17:16

ஒரே குடும்பம் ..ஒரே நிதி ........Enjoyment without Responsibility ...


Sankar Ramu
பிப் 13, 2025 17:51

ஒரே குடும்பம் அடிமையே ஆனந்தம்.


Bala
பிப் 13, 2025 20:33

திமுக என்றாலே சுருட்டு உருட்டு புரட்டு. அதைத்தவிர வேறொன்றும் தெரியாது


Rengaraj
பிப் 13, 2025 15:21

கடவுள் யாரையும் தன்னை வந்து பார்க்குமாறு கேட்பதில்லை. தனக்கு இதுதான் வேண்டுமென்று கேட்பதில்லை. இதைத்தான் படைக்கவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தவில்லை. வழிபாடு அவரவர் உரிமை , அவரவர் இஷ்டம். மேலே சொன்ன கூட்டமைப்பில் உங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார்கோவிலும் சேர்ந்துவிட்டால் என்ன ? அதன் வாசலில் விற்கப்படும் பூவை வாங்கினால்தான் உள்ளே விடுவார்களா ? அங்கு விற்கப்படும் தேங்காயை வாங்காமல் அர்ச்சனை பண்ண உங்களால் முடியாதா ? அதையும் மீறி உங்களிடம் பணம் பறிக்கப்படுகிறது என்று தெரிந்தால் மேலே சொன்ன கூட்டமைப்பில் வராத கோவிலில் சென்று வழிபட்டாலும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவார். ஆனால் உங்களிடம் உண்மையான பக்தி இருக்கவேண்டும்.


GMM
பிப் 13, 2025 15:10

தேசத்தில் உள்ள கோவில் , கடல் எல்லை, வன பகுதி, ஆகாயம் .. மாநில நிர்வாக நடவடிக்கை கட்டுப்பாட்டில் வராது . ஒரே கூட்டமைப்பு நிர்வாகம் கீழ் தேசிய கோவில்களை மத்திய அரசு கொண்டுவரலாம். தற்போது ஆன்மிக சுற்றுலா அதிகரித்து வருகிறது. உரிய வழிபாட்டு பயிற்சி, முறை... போன்றவை மிக பயன் தரும். கல்வி முறையில் பக்தி விருப்பம் ஆகும். ஆன்மிக உண்மை அறிந்து, அடுத்த தலைமுறை மனம், உடல் நலம் பெறும்


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 13, 2025 14:51

கோவில் உண்டியல் காசை கோவிலை சுற்றி 1 கிமி சுற்றளவுக்கு உள்ள இடத்தை வாங்கி பசும் சோலையாக மாற்றவும் .


Sivagiri
பிப் 13, 2025 14:45

கடவுளும் ஆன்லைன் கார்பொரேட் ஆகிறாராக்கும்? சரிதான் . . . ஓலா , உபேர் , ரெபிடோ , - அமேசான் - ப்ளிப்கார்ட் போன்ற , ஆன்லைன் கார்பொரேட்கள், ஏற்கனவே நாடெங்கும் இருக்கும் டேக்சிகளை ஆன்லைனில் பிடிச்சு வச்சு கண்ட்ரோல் பண்ணி, அவங்களிடம் ஏற்கனவே இருக்கும் கஸ்டமர்களையம், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இந்தப்பக்கம் ஒரு கமிஷன் - அந்தப்பக்கம் ஒரு கமிஷன் - சூப்பர் வியாபாரம் நடப்பது போல - - ஏற்கனவே இருக்கும் 32 லட்சம் கோவில்கள் - அவற்றின் கோடானுகோடி பக்தர்கள் - இவர்களுக்கு நடுவே ஒரு ஆன்லைன் கார்போரேட்டை புகுத்தி , கமிஷன் கமிஷன் கமிஷன் - - - இனிமேல் எந்த பக்தரும் டைரெக்ட்டா கோவிலில் சென்று கடவுளிடம் மன்றாட முடியாது போல - - ஆன்லைனில் காசை கட்டிட்டு - புக் பண்ணி , டைம் வாங்கிட்டு - அதுமட்டுமல்லாது , அந்த ஆன்லைன் கம்பெனி குடுக்கிற பூஜை சாமான்களை மட்டுமே , காசை கட்டீட்டு வாங்கி - தரிசனம் , அர்ச்சனை , இத்தியாதிகள் - - கடவுளே - - ஜாக்கிரதையா இருந்து , அதோட , பக்தர்களையும் , காப்பாற்றுமையா -


guna
பிப் 13, 2025 14:42

அப்போ சே..பாபு இனிமே டம்மி தானா?


Oru Indiyan
பிப் 13, 2025 14:33

தமிழ்நாடு அறநிலையத்துறை ஒழிந்தால் நிம்மதி


v narayanan
பிப் 13, 2025 14:14

தமிழக கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின் நடக்கட்டும் .