உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எங்களை வெல்ல முடியுமா?": சீமான் சவால்

"ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எங்களை வெல்ல முடியுமா?": சீமான் சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: 'ஓட்டுக்கு காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா?' என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.செங்கல்பட்டு மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: கோவை தொகுதியில் பிரசாரத்தின் போது ஆ.ராசாவை தவிர வேறு எந்த தி.மு.க., நிர்வாகியும் பா.ஜ.,வை எதிர்த்து பேசவில்லை. எந்த மாநிலத்திலாவது பிரதமர் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளாரா?. உதயநிதிக்கு தனியாக நேரம் கொடுக்கிறார்.கோவையில் ஓட்டிற்கு திமுக, அதிமுக ரூ.ஆயிரம் கொடுக்கிறது. பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை ரூ.2ஆயிரம் கொடுக்கிறார். இந்த இடத்தில் காசு கொடுக்கிறார்கள் என தகவல் கொடுத்தால் பல காரணங்கள் சொல்லி, அந்த இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் செல்வதில்லை.

என்னிடம் எதுவும் இல்லை

மாறாக மருத்துவமனைக்கு, கடைக்கு பொருள்கள் வாங்க போகிறவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குகிறார்கள். நான் பேசி முடிப்பதற்குள் 12 ஆம்புலன்சுகள் சென்றுவிடும். அதில் தான் பணம் கடத்தப்படுகிறது.என்னிடம் ஏன் ரெய்டு வருவதில்லை? ஏனென்றால் என்னிடம் எதுவும் இல்லை. ஓட்டுக்கு காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

theruvasagan
ஏப் 16, 2024 22:09

ஜெயிக்க வாய்ப்பு இருக்கும் என்றால் காசை கொடுக்கலாம். அப்படி இல்லாதபோது வந்த காசை வாரிவிடாம அப்படியே அமுக்கிக்கிறதுதான் பொழைக்குற வழி. கரெக்டுதானே.


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2024 20:34

ஒரு வார்டு கவுன்சிலர் பதவியை கூட பெறமுடியாத சீமான் விடுகிற சவால் எல்லாம் தண்ணீரில் எழுதப்படும் கோலங்கள் சீமான் கட்சி நடத்துவது பிரேமலதா போன்று தான் இயக்குனர் வேலை கிடைக்கவில்லை என்பதால், கட்சி நடத்தி பெரிய அளவிற்கு பணம் சம்பாரிக்கிறார் சீமானுக்கு ஒவ்வொரு தேர்தலும் பணம் காய்க்கிற மரம் மாதிரி தான்


Kanagaraj M
ஏப் 16, 2024 17:24

ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த கட்சியும் வெல்வது கடினம் கட்டுன பொண்டாட்டியே சோறு போடமாட்டாள் காசு கொடுவில்லையென்றால்


சுலைமான்
ஏப் 16, 2024 16:19

நீ காசு வாங்காம தேர்தல்ல நிக்க முடியுமா?


எவர்கிங்
ஏப் 16, 2024 14:47

ஊளை உதார்..... தோற்ப்பது உறுதி..... காரணம் காசு கொடுத்தார்கள் என் இப்பவே பல்லு படாமல்..... ஊளைஉதார்


Kasimani Baskaran
ஏப் 16, 2024 14:29

பணத்துக்குப்பதிலாக பொய்களை அளவில்லாமல் அள்ளிவிட்டு வியாபாரம் செய்வதில் வல்லவர் இந்த சைமன் என்கிற சீமான் வீர மற்றும் விஜய லட்சுமிகளிடம் இவரது பருப்பு வேகவில்லை


Ramanujadasan
ஏப் 16, 2024 14:59

இவரே அந்த லக்ஷ்மிகளுக்கு காசு கொடுத்து தானே சமாதானம் பண்ணிகிட்டார் ? இப்போது எதற்கு வாய் சவடால் ?


Narayanan
ஏப் 16, 2024 13:58

கட்டாயம் முடியும் சீமான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி