உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோகன் பகவத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்!

மோகன் பகவத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்!

புதுடில்லி: பா.ஜ., செய்வதை எல்லாம் ஆதரிக்கிறீர்களா என கேட்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.டில்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. வாக்காளர்கள் பட்டியலில் பா.ஜ., முறைகேடு செய்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு, கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் பா.ஜ.க., செய்த தவறுகளை ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கிறதா? மக்களுக்கு ஓட்டுக்காக வெளிப்படையாக பா.ஜ., தலைவர்கள் பணப் பட்டுவாடா செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அளிக்கிறதா? தலித் சமூகத்தின் ஓட்டுக்கள் குறைந்துள்ளது. ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்.எஸ்.எஸ்., நம்புகிறதா? பா.ஜ., ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று ஆர்.எஸ்.எஸ்., நினைக்கவில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஜன 01, 2025 16:23

அதற்குப்பதில் இவ்வாறு இருக்கவேண்டும். 1 ஆம் ஆத்மி முதல்வர் வீட்டின் சீர்திருத்தத்திற்கு ரூ 45 கோடி லேட்டஸ்ட் செய்தி ரூ 171 கோடியாம் அவசியமா 2 ஆம் ஆத்மி முதல்வர் 50 ACs in addition to a 250-tonne air conditioning plant. toilet seats costing 12 crore and a TV was worth over Rs 28 லட்சம் ???இது சாதாரண மனிதன் ஆம் ஆத்மி வீடா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை