உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஓட்டளிக்காமல் இருந்து விடாதீர்கள்": புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மம்தா வேண்டுகோள்

"ஓட்டளிக்காமல் இருந்து விடாதீர்கள்": புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மம்தா வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓட்டளிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது'' என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பா.ஜ.,வின் ரகசிய பங்காளிகள். மாநில போலீசாரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்?. மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்கக்கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா?.

ஓட்டளியுங்கள்!

மத்திய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெற முடியாது. ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓட்டளிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது. நீங்கள் ஓட்டளிக்கவில்லை என்றால் அவர்கள் (பா.ஜ.,) உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விட மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
ஏப் 21, 2024 10:52

இவர்கள் வாயாலேயே உண்மை வெளிவந்து விட்டது யாரை நம்பி நான் நிற்கிறேன் என்பதை நிரூபித்து விட்டார், பாராட்டுக்கள், வந்தே மாதரம்


ஆசாமி
ஏப் 19, 2024 20:47

பல்களாதேஷ் இருக்கையில் பயமேன்


வாய்மையே வெல்லும்
ஏப் 19, 2024 20:32

மமதை வளர்த்து விட்ட கடா மாடு மேற்குவங்கத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் திருட்டு ரயில் ஏறி தமிழகம் ஆந்திர கர்நாடகத்தில் தஞ்சம் புகுந்து வேலைசெய்கின்றனர் இவர்களின் வோட்டு போச்சே என நீலிக்கண்ணீர் வடிக்கும் மமதைக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும். மக்கள் புலம்பெயர்த்ததனால் எல்லா ஓட்டும் ஹோகயா போயிந்தி


Ramesh Sargam
ஏப் 19, 2024 20:00

முதல்வராக நீங்கள் மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை செய்யாமல் இருக்காதீர்கள்


P. VENKATESH RAJA
ஏப் 19, 2024 17:35

ஓட்டுக்காக மக்களை ஐஸ் வைக்கும் பணியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ