உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது நலன் என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பொது நலன் என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி, மாநில அரசு கையகப்படுத்த முடியாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.தனியார் சொத்துகளை பொது பயன்பாட்டிற்கு மாநில அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று (நவ.,05) தீர்ப்பு வழங்கியது.தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சதீஸ் சந்திர சர்மா, மனோஜ் மிஸ்ரா, பர்வேலா, நாகரத்னா, ராஜேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில், 'அரசியல் சாசன பிரிவு 39(B) படி எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி, மாநில அரசு கையகப்படுத்த முடியாது' 7 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர். 'ஒரு தனிநபருக்கு சொந்தமான நிலத்தை, சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானதாக கருத முடியாது. பொது நலன் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் மாநில அரசு கையகப்படுத்த முடியாது' என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். அரசியல் சாசன பிரிவு 39(B) பிரிவின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என நீதிபதி கிருஷ்ண ஐயர் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Paramasivam
நவ 05, 2024 21:32

தமிழக அரசு நிலத்தை அவ்வளவு சுலபமாக திரும்ப ஒப்படைக்கவில்லை. நில உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு, வழக்கில் 2009 ஆம் ஆண்டே வெற்றி பெற்றார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவு இட்ட பின்பும் 15 ஆண்டுகள் அரசுடன் போராடி வந்துள்ளார்கள். திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் பெருமளவு பணம் கேட்டு வந்தார்கள். எப்படி செட்டில் ஆனது என்று ஆண்டவனுத்தான் தெரியும்.


தாமரை மலர்கிறது
நவ 05, 2024 20:14

இந்தியாவின் அரசியமைப்புப்படி, மாநில அரசு வெறும் டம்மி பீசு தான். முதல்வர் என்பவர் வெறும் மேயர் தான். இருந்தும், ஸ்டாலினின் அடிப்பொடிகள் ஸ்டாலின் ஏதோ பெரிய திமிங்கலம் போன்று பீலா விட்டுக்கொண்டு திரிகிறார்கள். ஸ்டாலின் வெறும் தமிழக மேயர் மட்டும் தான். அவருக்கு சொத்து வரி மற்றும் போலீஸ் அதிகாரம் மட்டும் தான் உள்ளது. மற்றபடி எல்லாவற்றுக்கும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அதிகாரமற்ற மேயர் தான் ஸ்டாலின். நீட் உட்பட கல்வி, வரிவசூலிப்பு, டோல் கேட், ரயில்வே, போஸ்டல், மருத்துவ கட்டமைப்பு உதவி, உயர் கல்வி, பொருளாதாரம், தொழில்கள், கட்டுமானங்கள், பாதுகாப்பு, பணம் என்று அணைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. ஸ்டாலின் அதிகாரம் சாக்கடையை அகற்றுவது போன்ற சிறு சிறு உள்ளாட்சி, நகர வேலைகள் மட்டுமே. ஸ்டாலின் அணில் அளவு இருக்கும்போதே புலி போன்று உருமுகிறார். ஸ்டாலினின் அடிப்பொடிகள் அவர் இறைத்து விடும் சில்லறைக்காக கரடியாக கதறுகிறார்கள். மத்திய அரசில் அமைச்சர் பதவிக்கு வந்தால், வானத்தில் தான் பறப்பார்.


தாமரை மலர்கிறது
நவ 05, 2024 20:04

மிக சரியான தீர்ப்பு. தனியார் சொத்துக்களை கைப்பற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது.


அப்பாவி
நவ 05, 2024 17:14

முன்னெச்சரிக்கை தான். நாளைக்கி நீதிபதிகள் மடியிலேயே கை வெச்சுட்டா?


Dharmavaan
நவ 05, 2024 15:43

சட்டம் ஒன்றே ஆனால் மாறுபட்ட தீர்ப்பு ஆளுக்கேற்றபடி இது சரியான நீதியா


GMM
நவ 05, 2024 15:01

ஓய்வு பெறும் மாதத்தில் வழங்கும் தீர்ப்பு ஏற்புடையதா? நிர்வாக விதி என்ன? தனியார் நில அளவு கோல் என்ன? கிரய நிலம் மட்டும். மூல பத்திரம், மூலம் யில்லாத பத்திர பதிவு, பட்டா, நில வரி, மாறிய உடன் தனியார் சொத்தா? அல்லது சுமார் 30 - 50 ஆண்டுகள் உபயோகத்தில் இருக்க வேண்டுமா? தனியார் நிலம் சுற்றி அரசின் அபிவிருத்தி பணிகள். அதன் செலவுகள். இதில் தனியார் பங்களிப்பு இருக்காது. ஆனால், அபிவிருத்தி பணிகளினால் தான் நில விலை கூடும். பின் எப்படி நில உச்சவரம்பு, உழுபவனுக்கு நிலம் சட்டம் செல்லும்.? பஞ்சமி, வக்பு வாரிய நிலம் தனியார் நிலமா? முதலில் புரியும்படி சட்டம் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு தனியார் நிலம் எடுக்க கூடாது என்று கூறும்போது, ஊழல் அரசியல் குளம், குட்டை, வனப்பகுதியை நாடும். இந்திய நகரில் உள்ள அனைத்து நீதிமன்றம், சிறை... நகருக்கு வெளியில் மாற்ற வேண்டும்.


Dharmavaan
நவ 05, 2024 17:55

.யாரும் கேள்வி இல்லை


panneer selvam
நவ 05, 2024 20:40

GMM , do not hurry to criticize the judgement with out understanding the SC order . First it is 7 of 9 judges concurred judgement not alone by retiring Supreme Court Chief Judge Y.V.Chandrachud . There are other six more judges concurred with his judgment. It talks about unilateral nationalisation of land just in the name of public interest . It cancels Otherwise our most known Communist Supreme court Judge Krishna Iyer judgement stating that government could take over the lands from private just by quoting public interest . It was blanket approval on take over of private lands. Now government has to justify their purpose on taking over private lands. So read the judgement properly before you write in public forum


ஆரூர் ரங்
நவ 05, 2024 14:41

42 வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் இந்திராகாந்தி சொத்துரிமையையே அடியோடு பறித்தார். பின்னர் ஜனதா அரசு அந்த உரிமையை மீண்டும் அளித்தது. ஆனால் அதற்குப் பின் வந்த பல தீர்ப்புக்கள் பொதுப்பயன்பாட்டுக்கு நிலமெடுப்பதில் தவறில்லை என்றே கூறின. இனிமேல் எந்த அரசுத் திட்டத்துக்கும் நிலம் கையகப்படுத்தல் மிகவும் கடினமாக இருக்கும். திட்டங்கள் தாமதமானால் மக்கள் பொறுமையிழப்பர் . இதற்காக நிரந்தர தீர்ப்பாயம் அமைத்து ஒவ்வொரு திட்டத்திற்கும் குறிபிட்ட நிலத்தை அரசு எடுப்பது அத்தியாயமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யலாம்.


KRISHNAN R
நவ 05, 2024 14:21

திடீர் என்று வரும் போகும் மாறும்......எப்படியும்....காட்சிகள். எல்லாம்...கட்சிகளுகே தான்


Ramesh Sargam
நவ 05, 2024 14:03

நீதிமன்ற உத்தரவை மீறும் மாநில அரசை கடுமையாக கண்டிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு.


Rangarajan Cv
நவ 05, 2024 13:38

Land mark decision by SC.


சமீபத்திய செய்தி