உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: 3 நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை

தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: 3 நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை

புதுடில்லி: டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி கவாயிடம் விலங்கின ஆர்வலர்கள் முறையிட்டனர். இதனை பரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், 3 நீதிபதிகள் அமர்வு முன்புஇந்த வழக்கு நாளை ( ஆக., 14) விசாரணைக்கு வர உள்ளது.நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப் பதிந்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, நீதிபதி ஆர்.மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, ' 'டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கு நாடு முழுவதும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதும், விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் எதிர்த்தனர். முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்கின ஆர்வலருமான மேனகா கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நடைமுறை சாத்தியம் இல்லாதது. போதிய நிதியில்லை. சமநிலையை பாதிக்கும் எனத் தெரிவித்தார்.பீட்டா அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கூறுகையில், ஏராளமான நாய்களை இடமாற்றுவது என்பது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லை என தெரிவித்து இருந்தார்.இது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாயிடம் முறையிட்டனர். இதனை பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி அப்போது உறுதியளித்தார்.இந்நிலையில், இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சனேரியா அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி