உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்பு : ஓவைஸி காட்டம்

பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்பு : ஓவைஸி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, '' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ளார்.

கண்டனம்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தானை ஓவைஸி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்நாட்டின் செயலை உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.பி.,க்கள் குழு

பயங்கரவாதத்தை ஆதரித்து, இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எம்.பி.,க்கள் கொண்ட குழுவை பிரதமர் மோடி அமைக்க உள்ளார். இக்குழுவினர் உலகின் பல நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

படுகொலை

இந்நிலையில் அசாதுதீன் ஓவைஸி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் நீண்ட காலமாக தூண்டிவிடப்படும் பயங்கரவாதம், மனிதநேயத்திற்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இந்த செய்தியை எம்.பி.,க்கள் குழுவினர் உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் காரணமாக இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் ஆட்சிக்காலம் முதல் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை பார்த்து வருகிறோம்.

பாக்.,கின் நோக்கம்

இந்தியாவுக்கு எதிரான மோதலில், பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக தன்னை காட்டிக் கொள்வது முட்டாள்த்தனமானது. இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இது குறித்தும் உலக நாடுகளிடம் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உருவாக்குவது, வகுப்புவாதப் பிளவை தூண்டுவது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பது ஆகியவை பாகிஸ்தானின் எழுதப்படாத சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும். இதுவே, பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.

அச்சுறுத்தல்

1947 முதல் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை அனுப்பி வருகிறது. இதனை அவர்கள் தொடரத்தான் செய்வார்கள். நிறுத்தப்போவது கிடையாது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, இந்தியாவின் பொறுமையை இழந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான், மனித நேயத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இவ்வாறு ஓவைஸி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Madhava rao Vittal (vittal)
மே 23, 2025 21:26

ஆடு நினைகிறதே என ஓநாய் அழுகிறது


venugopal s
மே 18, 2025 06:47

இவர் விரைவில் மத்திய பாஜக அரசில் அமைச்சராகி விடுவார் போல் உள்ளது!


Ramesh Babu
மே 17, 2025 19:18

உங்களுடைய காட்டம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். 2013 இல் நீங்கள் கேட்ட 15 நிமிட காவல் துறை கட்டுப்பாடுகள் தான் நினைவில் நிற்கிறது. பல நூற்றாண்டுகளாக உங்கள் சமூக கொடுமைகளை சகித்துக் கொண்டு வருகிறது இந்த தேசம் என்பது உண்மை.


Iniyan
மே 17, 2025 18:47

சாத்தான் வேதம் ஓதுகிறது


Kulandai kannan
மே 17, 2025 18:45

இவர் மீதெல்லாம் நம்பிக்கையே வருவதில்லை.


Veeraputhiran Balasubramoniam
மே 17, 2025 18:34

ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூட அரசியல் காரண்த்திற்க்காக ஒரு மத சார்பாக் இருந்தாலும் தேசம் என்று வரும் போது அவர் ஒரு இந்திய இஸ்லாமியராக தேசப்பற்றுடன் குரல் ஏழுப்புகிறார்.... நம்ம 200 ரூபா திராவிட மாடல் கூட்டணி கட்சிகள் போல் அல்லாமல் கம்மூனிஸ்ட், திருமா, வைகோ, செபஸ்டின் சீமான், ஜோசப் விஜய், கூட்டணியில் இருக்கும் சிறுபான்மையின் கட்சி தலைவர்கள். அவருக்கு வாழ்த்துக்கள்


Balasubramanian
மே 17, 2025 17:55

ஐயோ இவர் வந்து தமிழகத்தில் பாஜக உடன் கூட்டு வைத்தால், நடுநிலையாளர்கள் ஓட்டு போச்சே! ஏற்கனவே இவரை பாஜகவின் B Team என்று காங்கிரஸ் சொல்லி திரிகிறதே!


ஆரூர் ரங்
மே 17, 2025 17:45

வாப்பா ஹைதராபாத் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன்இணைக்க போராட்டம் நடத்தினார் என்பர். இப்போ எது இவரை இப்படி பேச வைக்கிறது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை