உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டன. அந்த அமைப்புகளில் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787, 737 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆய்வை முடித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், போயிங் 787 மற்றும் போயிங் 787 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனை எந்த பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.ஏர் இந்தியா, நீண்ட தூர பயணங்களுக்கு 787 போயிங் ஜெட் விமானங்களை பயன்படுத்துகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போயில் 737 ஜெட் விமானங்களையும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay D Ratnam
ஜூலை 22, 2025 22:32

கடந்த பத்து ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான ஏர்பஸ் விமானத்தோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவின் போயிங் அதிகளவில் விபத்துகளை சந்தித்து இருக்கிறது அதிக டெக்கினிக்கல் ப்ராப்ளம் பிரச்சினையால் தாமதம், ரத்து, பாதி வழியில் இறங்குவது என்று ஏகப்பட்ட அக்கப்போர். தரமற்ற போயிங் தயாரிப்பு விமானத்தை வாங்குவதை ஏர் இந்தியா நிறுத்த வேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூலை 22, 2025 17:08

எரிபொருள் குழாய் வால்வு கீழிருந்தும் ஒருவர் அவன் யார் முடியும் அதை செய்ததால் தான் இந்த விபத்து நடந்தது. சும்மா அப்படி இப்படி டப்பா அடிக்கவேண்டாம்


தத்வமசி
ஜூலை 22, 2025 15:55

இந்தியாவில் நடந்த பல இது போன்ற விபத்துகளுக்கு விடிவு இன்னும் இல்லை. உதாரணம் போபால் விஷவாயு கசிவு. குற்றவாளி யார் ? தண்டிக்கப்பட்டது யார் ? கோவை, மும்பை குண்டு வெடிப்புகள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா ?


அப்பாவி
ஜூலை 22, 2025 15:24

உண்மை ஒரு போதும் வெளிவராது. இவிங்க 2018 லேயே ஆய்வு செய்ய வேண்டியதை செய்யலை. இப்போ ஏதாவது வால் நுனில ஒரு பல்லி இருந்திச்சுன்னு காரணம் வரலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை