உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் அன்பால் பலம் பெறுகிறேன்: பிரதமர் மோடி

மக்களின் அன்பால் பலம் பெறுகிறேன்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மக்கள் காட்டிய அன்பை கண்டு பிரமித்துப்போனேன். இந்த அன்பு என்னை பலப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துகிறது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடி இன்று( செப்., 17) 75வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதிலும் எண்ணற்ற மக்கள் பிரதமருக்கு சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் சக்திக்கு நன்றி. நாடு முழுவதில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த எண்ணற்ற வாழ்த்துகள், ஆசிர்வாதங்கள் மற்றும் அன்பு செய்திகளால் நான் உண்மையிலேயே பிரமித்து போனேன். இந்த அன்பு என்னை பலப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துகிறது. இதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.நாடு முழுவதும் ஏராளமானோர் எண்ணற்ற சமூக சேவை திட்டங்களை செய்து வருகின்றனர். இன்னும் பல திட்டங்கள் வரும் காலங்களில் தொடர உள்ளன. நம் மக்களிடம் இருக்கும் உள்ளார்ந்த இந்த நன்மை நம் சமூகத்தை நிலைநிறுத்துகிறது. நம்பிக்கையுடனும், நேர்மறையுடனும் அனைத்து சவால்களையும் சமாளிக்க நமக்கு தைரியத்தை அளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளை முன்னின்று செய்பவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.நீங்கள் என் மீது வைத்து இருக்கும் எண்ணற்ற விருப்பங்களும், நம்பிக்கையும் மிகுந்த பலத்தை தருகின்றன. அவற்றை எனக்கு மட்டும் அல்லாமல், சிறந்த இந்தியாவை உருவாக்க நாம் இணைந்து செய்யும் பணிக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்க்கிறேன். வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்க இன்னும் அதிக ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்ற நான் உறுதி பூண்டுள்ளேன்.வாழ்த்துகளுக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியவில்லை ஆனால், நான் மீண்டும் கூறுகிறேன். மக்களின் அன்பு என் இதயத்தை ஆழமாக தொட்டுள்ளது. அனைவரின் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Priyan Vadanad
செப் 18, 2025 02:23

ஒரு மதத்தில் பிறந்து, ஒரு இயக்கத்தில் வளர்ந்து, ஒரு கட்சியில் இணைந்து, இப்போது தனிப்பெரும் தலைவராக நிறைந்து புதுப் பாரதம் படைக்க மக்களின் அன்பால் இன்னும் பலம் பெற்று, நூறு வயது நோக்கி பயணம் செய்ய பாரதத்தாய் துணையிருக்கட்டும்.


Ramesh Sargam
செப் 18, 2025 00:37

உங்களின் சிறந்த தலைமையால், மக்கள் சிறப்பாக வாழ்கிறார்கள். உங்களுக்கு நன்றி.


Priyan Vadanad
செப் 17, 2025 22:31

எல்லாவற்றையும் கடந்து மக்களின் செல்ல தலைவராக நிறைந்து புதுப் பாரதம் படைக்க மக்களின் அன்பால் இன்னும் பலம் பெற்று, நூறு வயது நோக்கி பயணம் செய்ய பாரதத்தாய் துணையிருக்கட்டும்.


Anu Sekhar
செப் 17, 2025 22:20

இப்படி ஒரு நல்ல பிரதமர் கிடைக்க இந்தியா கொடுத்து வைத்துள்ளது. வாழ்க மோடி பாரதம்