உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் என்பது தலைமை நீதிபதியை மையப்படுத்தியதாக உள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்,'' என ஓய்வு பெறும் நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா கூறியுள்ளார்.சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றும் அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா பணி ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: கமிட்டிகள் மூலம் ஐகோர்ட்டுகள் செயல்படுகின்றன. ஆனால், சுப்ரீம் கோர்ட் என்பது, தலைமை நீதிபதியை மையப்படுத்தி செயல்படுகிறது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போதைய தலைமை நீதிபதி தலைமையில் இது நடக்கும் என நம்புகிறேன்.முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வெளிப்படைத்தன்மை நோக்கிய பாதையில் நம்மை முன்னெடுத்துச் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளின் நம்பிக்கையை பெற்ற பிறகே அவர் முடிவு எடுத்தார். தற்போதைய நீதிபதி கவாய் ரத்தத்தில் ஜனநாயக மாண்பு ஓடுகிறது.நாம், விசாரணை நீதிமன்றம் மற்றும் சாமானிய மனிதர்களை பற்றி சிந்திக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களிலும், விசாரணை நீதிமன்றங்களிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.விசாரணை நீதிமன்றங்களை துணை நீதிமன்றங்கள் என அழைக்கக்கூடாது. இது அரசியலமைப்பு மாண்புக்கு எதிரானது. ஒருவரை 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்டிப்பது என்பது கடினமான பணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Balakrishnan karuppannan
மே 25, 2025 06:22

காலம் தவறிய நீதி... காசுக்கான நீதி.... கட்சிக்கான நீதி இவையெல்லாம் சாமானியனை சவக்குழியில் தள்ளுகிறது. இதற்கு இது வரை தீர்வு சொல்ல யாருமே இல்லை.


Chandrasekaran
மே 24, 2025 10:14

தன் பணிக்காலத்தில் செயல் படுத்திக்காட்டியிருந்நால் பாராட்டுவார்கள் எதிர்காலத்துக்கு ஓய்வு பெறும்போது விட்டுச் செல்லும் உயிலாகாவே கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. தேங்கியுள்ளவை நீர்த்துப்போனபின் தீர்க்கப்பட்டாலும் ஒன்று தீர்க்காப்படாமல் போனாலும் ஒன்று.. காலவரையரை நிர்ணயம் செய்பவர்களீளுக்கு அது பொறுந்தாது என்பதே அநநிலைக்கு .காரணம். வழக்குப் பதிவு செய்யப்படும்போதே ஓரளவு வழக்கின் உண்மைத் தன்மை புரியும். அதுவே அப்பணியின் முதிர்ச்சி நிலை. எனவே வாய்தாவைக்குறைத்து முடிவு செய்தால் வழக்கு தேங்க வாய்ப்பில்லை. நிரபராதி தண்டிக்கக்கூடாதென்ற பழைய புராணம் இக்காலத்திற்கு உதவாது. மக்களே தவறை அறிந்த போதும் சட்டப்படீ எதிர்கொள்வேன் என்பாது சட்டத்துக்கு விடும் சவால்.


GMM
மே 24, 2025 07:59

அனைத்து நீதிமன்றங்களில் செயல் பாட்டில் அரசு நிர்வாக முறை. மக்கள் முதல் மனுவை நீதிமன்றம் நேரிடையாக பெறுதல். வரிசை எண் தருவது. அதன்பின் வக்கீல் மனுக்கள் தயாரித்தல் . நீதிமன்ற கட்டணம், வக்கீல் பீஸ் வங்கி கணக்கு மூலம் மட்டும். பணம் பெற்றால் குற்றம். நீதிபதி தேர்வு தகுதி அடிப்படையில் மட்டும். சிவில் வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் முன் பதிவு. அதன் பின் மனு நிர்வாக விசாரணை மற்றும் கால நிர்ணயம் செய்து முடிவு. வக்கீல் வாதிகளுக்கு இடையே ஒப்பந்தம். முதல் மனு வக்கீல். தொடர் மனு நேரிடையாக வாதிகள் கொடுக்கும் முறை. 3 வாய்தா. ஜாமின் கொடுக்க அரசு மற்றும் பாதிக்க பட்ட நபர் அனுமதி. குற்றத்திற்கு ஆதரவாக வாதிட்ட வக்கீலுக்கு தண்டனை. தன் எல்லைக்குள் மட்டும் மனுவை நீதிமன்றம் விசாரிக்கும் முறை. கவர்னர், ஜனாதிபதி, தேர்தல் ஆணையம், தணிக்கை தலைவர், ராணுவம் மற்றும் மத்திய வங்கி, பிரதமர் எதிராக நீதிமன்றம் விசாரிக்க நிரந்தர தடை. கொலிஜியம் ஒழிப்பு. நீதிபதி தீர்ப்பு மீது தணிக்கை செய்து அரசாணை வெளியீடு. நினைவு குறைவதால் வக்கீல், நீதிபதி உச்ச வயது 60. சட்ட விதிகள் இல்லாமல் கூறும் கருத்து அமுல் படுத்த முடியாது. நீதிமன்ற செயல் பாடுகளின் ஏராள மாற்றம் தேவை.


அப்பாவி
மே 24, 2025 07:44

பதவியில்.இருக்கும் வரை ஆண்டு அனுபவிச்சுட்டு இன்னிக்கி கலாய்க்கிறார்.


Ramona
மே 24, 2025 07:06

நம்ம நாட்டுல நீதிதேவதை நீண்ட நித்திரை கொண்டுள்ளது, அதை தட்டி எழுப்பி தனத தராசு முள் எந்த பக்கமும் சாயாமல் நேராக இருக்க வேண்டிய நேரம் .எந்தகுற்றம் ஆனாலும் பரவாயில்ல, சு கோ இருக்கவே இருக்கு அங்க போனால் உடனடியாக நமக்கு வேண்டியது கிடைக்கும், என்ற நம்பிக்கையான கோர்ட்டாகிவிட்டது , நீ ம மீது இருந்த பயம் துளிகூட இப்போது இல்ல அது ஏன்?


R.Varadarajan
மே 24, 2025 05:13

இந்திய நீதித்துறையில் இடது சாரி ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிரது தமு அரசியல் சாசனத்தில் நீதிபதிகளை தெரிவுசெய்யும் கொலுஜியத்திற்கான ஷரத்து ஏதும் இல்லை நீதிபதிகள் தங்களை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது அரசியல்சாசனத்திற்கு திருத்தம் கொண்டுவருவது நாடாளுமன்றத்தின் தனி அதிகாரம் அதை நீதித்துறை தன்கையில் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளமுடியாது அப்படி செய்வது அரசியல் சாசனத்தில் இடம்பெறாத அதிகாரத்தை கையில் எடுப்பது எதேசசாதிகாரமே சட்டக்கமிஷன் திருத்தி அமைக்கப்பட்டு மைய அரசின் சார்பாக நீதிபதிகள் நியமனங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் பெற்றதாக செயல்படவேண்டும. நீதிபதிகள் நேர்முகம் செய்யப்பட்டு மிக்கத்தகுதிவாய்ந்தவர்களையே தேர்ந்தெடுத்து ஜனாதிபதியினால் நியமிக்கப்படவேண்டும் அரசியல் சார்புடையவர்களை நியமிக்க அரசியல் கட்சியினரின் பரிந்துரைகள் தேவையற்றது, புறக்கணிக்கப்படவேண்டும் இதில் சாதி மத வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்படக்கூடாது தகுதி மட்டுமே முக்கியமான காரணியாக அமைய வேண்டும் எந்த குப்பன சுப்பனையும் அரசியல் காரணங்களுக்காக வோ , இட ஒதுக்கீட்ட்டு அடிப்படையிலோ நீதிபதிகளாக நியமனம் செய்யப்படக்கூடாது அப்படி செய்தாலே ஒழிய இப்போது நீதித்துறையின்அவலங்களுக்கு ஒரு முடிவு அமையும்


மீனவ நண்பன்
மே 24, 2025 01:08

முதலில் கோடை விடுமுறை தசரா விடுமுறை போன்ற பிரிட்டிஷ் பழக்கங்களுக்கு தடை போடுங்கள் ... வேற்றுலகிலிருந்து வந்த சம்மனசுகள் மாதிரி நடக்க வேண்டாமே


Raghavan
மே 24, 2025 00:13

20 வருடங்களாக ஒரு வழக்கை முடிக்கமுடியவில்லை என்கிறபொழுது அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் மேலும் மேலும் வாய்தவை கொடுப்பது யார்? மாண்புமிகு நீதிபதிகள் தானே. ஏன் நீங்கள் வாய்தா வழங்குவதற்கு ஒரு வரைமுறை கொண்டுவரக்கூடாது. சிவில் வழக்கு என்றால் ஒரு காலவறை கிரிமினல் வழக்கு என்றால் ஒரு காலவறை என்று ஒரு சட்டம் கொண்டுவரவேண்டியதுதானே. உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடுத்தால் அது விஜாரணைக்கு சுமார் ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு வரும்போது இந்த வழக்கை இங்கே ஏன் தொடுத்தீர்கள் இதை நீங்கள் உயர் நீதிமன்றத்தில் தானே தொடுத்திருக்கவேண்டும் என்று அதை உயர் நீதிமன்றத்துக்கு திருப்பிஅனுப்பி ஒரு காலவறைக்குள் முடிக்கும்படி சொல்லுகிறீர்கள். ஆனால் நடப்பது என்ன? நீங்கள் 5 வருடங்களுக்கு பிறகு முழித்துக்கொண்டு அதை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பும்போது அங்கே உள்ளவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நினைத்துப்பார்ப்பதே இல்லை. அவர்கள் மனதில் இவர்கள் 5 வருடங்களாக தூங்கிவிட்டு நம்மை 6 அல்லது 10 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தான் ஓடும். உச்ச நீதி மன்றமும் நம்மிடம் இருந்து கைகழுவியாகிவிட்டாச்சு இனி அவர்கள் பாடு என்று அதைப்பற்றி சிந்திப்பதே கிடையாது. உயர் நீதிமன்றமும் அந்த வழக்கை இழு இழு என்று சுமார் 10 டு 15 வருடங்களுக்குமேல் இழுக்கும். இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. கால வரையறை கண்டிப்பாக வேண்டும். எப்படி உச்ச நீதிமன்றம் ஆளுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் முடிவெடுப்பதில் ஒரு காலவரையறையை கூறியதோ அதேபோல் தங்களுக்குள்ளும் ஒரு காலவரையறையை கொண்டுவரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நீதிமன்றங்களின்மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். அரசியல் வாதிக்கு ஒரு நீதி, பணம் காசு உள்ளவனுக்கு ஒரு நீதி என்று ஆகிவிட்ட பிறகு சாமான்யமக்களுக்கு எப்படி நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வரும்.


தாமரை மலர்கிறது
மே 23, 2025 22:49

மத்திய அரசின் கொள்கைகளை சுப்ரீம் கோர்ட் மதித்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார். தான்தோன்றித்தனமாக நடக்க கூடாது.


Gopalsamy
மே 24, 2025 12:57

அரசியல் அமைப்பு சட்டம் தான் உயர்ந்தது அரசுகள் மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளும் அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும்.தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரணாக முடியாது


நசி
மே 23, 2025 22:18

நல்லா பேசுங்க. நாட்டின் நிலைமை ஊழல். ஊறி போனதுக்கு யாருமே காரணம் இல்லை..பொள்ளாச்சி பாலியல் ஆயுள் தண்டனை. நாட்டின் முன்னாள் பிரதமர் 14 போலீஸ் குடும்பங்கள் இறப்பை சந்தித்துள்ளது மரணதண்டனை மாற்றபட்டது...பொள்ளாச்சி சீகீகரமா வெளி வரா மாதிரி லீகல் ப்ரைன்ஸ் இருக்கு


புதிய வீடியோ