உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை: பா.ஜ., தாக்கு

திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை: பா.ஜ., தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை உள்ளது என காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்கள் சந்திப்பில்,'' மேற்கு வங்கத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பா.ஜ.,வுக்கு தைரியம் இருந்தால் ஏதாவது செய்ய வேண்டும். மணிப்பூரில் செய்ய முடியவில்லை. மேற்கு வங்கத்தில் எப்படி செய்வார்கள்?. பிரதமர் மோடிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதால் அதைச் செய்ய முடியாது. தன்னை எதிர்த்து லோக்சபா தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

தலிபான் மனநிலை

இதற்கு பதில் அளித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை உள்ளது என காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். காங்.,எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்கத்தில் ஜனாதிபதியை ஆட்சியை கோரியுள்ளார். ஒருபுறம் காங்கிரஸ் திரணமுல் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தர்வர்கள் கூறுகின்றனர். இதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல், சோனியா பதில் சொல்ல வேண்டும். இது என்ன கூட்டணி?. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mayuram Swaminathan
ஜன 07, 2024 11:56

மேற்கு \வங்கத்தில் ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரம் ஓங்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் சொல்லுகிறார் ஆனால் காங்கிரஸ் உச்ச கமாண்ட் தலைவர்கள் வாய் மூடி மௌனம் காப்பது எனோ?


Barakat Ali
ஜன 07, 2024 11:48

முற்றிலும் உண்மை ........... மேற்குவங்கத்தில் பல த்ருணாமூல் கட்சி சிறுபான்மை குண்டர்கள் செல்வாக்குடன் சட்ட விரோத செயல்களை செய்கிறார்கள் ....... இதனால் பெரும்பான்மை ஹிந்துக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் என்றாலே இப்படித்தானா என்கிற அதிருப்தி மேலோங்குகிறது .....


Shankar
ஜன 07, 2024 11:36

இதற்கு பெயர்தான் புள்ளி வச்ச கூட்டணி. எப்போதும் ஒன்றுசேராது.


Kasimani Baskaran
ஜன 07, 2024 11:24

தலிபான்களை அவமதிப்பது தவறான அணுகுமுறை. திரினாமூல் கிட்டத்தட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு போன்ற மன நிலையை உடைய கட்சி.


அப்புசாமி
ஜன 07, 2024 11:22

போலீஸ், என்.ஐ.ஏ, ராணுவம்னு எல்லாத்தையும் வெச்சுக்குட்டு ஆக்ஷன் எடுக்கத் தெரியாமல் பொலிட்டிகல் ஸ்டேட்மெண்ட் உடுவாங்க.


Kasimani Baskaran
ஜன 07, 2024 14:16

டிஸ்மிஸ் செய்தால் முதலில் ஊளையிடுவது ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை