உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இண்டியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் ஒரு அங்கம்"; காங்., உறுதி

"இண்டியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் ஒரு அங்கம்"; காங்., உறுதி

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த , காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ; '' இண்டியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் ஒரு அங்கம். தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் தான் இறுதி முடிவு எடுப்பார்கள்'' என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

பெரும்பாலான இடங்களில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மட்டுமே எஞ்சி உள்ளன. லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க தேசிய அளவில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நிதீஷ் குமார் இண்டியா கூட்டணி விட்டு விலகினார். ஆனாலும் இண்டியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரி கட்சிகள் இண்டியா கூட்டணியை பலப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளனர். இண்டியா கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் ஒரு அங்கம்.

தொகுதி பங்கீடு

மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். இன்று 43வது நாளான பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணியளவில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக்கு எங்கள் கட்சியினர் உதவுவார்கள். அவர்கள் தேர்தலில் எங்களுக்கு உதவுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ