உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்டுதோறும் 35-40 போர் விமானங்கள் தேவை: விமானப்படை தளபதி வலியுறுத்தல்

ஆண்டுதோறும் 35-40 போர் விமானங்கள் தேவை: விமானப்படை தளபதி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார். இது குறித்து, டில்லியில் நடந்த மாநாட்டில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கூறியதாவது: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 24 தேஜாஸ் எம்கே1ஏ ஜெட் விமானங்களை தயாரிக்கும். இந்திய விமானப்படை (IAF) தனது பழைய விமானங்களை மாற்றுவதற்கு ஆண்டுக்கு குறைந்தது 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும். உள்நாட்டு விமான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.உலக சந்தையில் கிடைக்கும் பொருட்களில் 90 சதவீதம் அல்லது 85 சதவீதத்தை ஒரு உள்நாட்டு நிறுவனம் வழங்கினால் நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம். பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தன்னிறைவு மிக முக்கியமானது. வெளிநாட்டு சப்ளையர்களை நம்பியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

விஜேஷ்
மார் 01, 2025 07:52

ட்ரம்ப்பிடம் பேசலாம். ரெடியா இருக்காரு.


Petchi Muthu
பிப் 28, 2025 23:40

இஸ்ரோ முயற்சியால் விண்வெளி துறை வளர்ச்சி அடைந்துள்ளது விமானப்படையும் வளர்ச்சி அடைய வேண்டும்


Bye Pass
பிப் 28, 2025 23:34

ஆளில்லா விமானங்கள் தான் தேவை ..இரான் போன்ற நாடுகளே தயாரித்து ரஷ்யாவுக்கு தருகின்றன. இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகளில் கூட்டு முயற்சியில் சுயமாக தயாரித்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்


Radhakrishnan Seetharaman
பிப் 28, 2025 22:44

அற்புதம்! சண்டிகர் லாபியிலிருந்து நமது விமானப்படை முழுவதுமாக விடுபட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை