உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் மேலும் 36 பேர் ஆதரவு; பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என காட்டம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் மேலும் 36 பேர் ஆதரவு; பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என காட்டம்

புதுடில்லி: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் 36 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருக பெருமான் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். ஆனால் அதை நிறைவேற்றாத தமிழக அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது. அதேநேரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், ஹிந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட, 56 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர்.தற்போது மேலும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் 36 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணா முராரி, டில்லி மற்றும் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் மேனன் மற்றும் எஸ் வைத்தியநாதன் ஆகியோர் உட்பட நீதிபதிகள் 36 பேர் கையெழுத்திட்டு கூட்ட அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி. நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க கட்டாயப்படுத்தும் ஒரு வழிமுறையாக பதவி நீக்க அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.அத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு வெறுப்பூட்டுவதாகும். தற்போதைய முயற்சி வெட்கக்கேடான ஒன்றாகும். பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது நீதித்துறை கடமையைச் செய்ததற்காக அவரை பதவி நீக்கம் செய்வதா? அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாத நீதிபதிகளை வசைபாடுவதற்கான ஒரு வெட்கக்கேடான முயற்சி இது. இது தொடர அனுமதிக்கப்பட்டால், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sinna Mariappan
டிச 22, 2025 00:27

நீதிபதிகள் தீர்ப்பை தன் மனதில் தோன்றியதையெல்லாம் வைத்து சொல்லக்கூடாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்ன கூறி இருக்கிறதோ அதுவல்லாமல் நினைத்ததை மற்றும் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை கருத்தில் நீதி வழங்கக்கூடாது. பாபரி மஸ்ஜித் வழக்கில் அப்படி தான் அநீதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இது அநீதி இல்லையா? இந்த சுவாமிநாதன் தன் மனதில் தோன்றியதை தீர்ப்பாக சொன்னதால் தான் கலவர சூழல் ஏற்பட்டது. அரசு முறையாக செயல்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். நீதிபதி அநீதிபதியாக இருக்கக்கூடாது.


Barakat Ali
டிச 21, 2025 07:50

பல நீதிபதிகள் யோசித்து யோசித்து, தயங்கித் தயங்கி ஜி ஆர் எஸ் க்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.. இவர்களில் சிறுபான்மை நீதிபதிகள் இல்லை... இந்நிலை பெரும்பான்மை ஹிந்துக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழக்க உதவும்.. பெரும்பான்மை ஹிந்துக்கள் மத அடிப்படையில் ஒன்றுகூடி வாக்களிக்க உதவும் ......


Kasimani Baskaran
டிச 21, 2025 06:57

பாராளுமன்றத்தை மிஞ்சி 120 எம்பிக்கள் ஒன்றும் முடியாது. ஆனால் யார் இந்துக்களின் விரோதிகள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமா என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே எட்டுத்திக்கும் உள்ள உறவுகள் நட்புக்களுக்கும் இந்து விரோதிகளுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.


சண்முகம்
டிச 21, 2025 05:47

பா ஜ க பெரும்பான்மை இந்த தீர்மானத்தை சிதறடித்துவிடும். இண்டியின் வெட்டி வேலை.


sinna Mariappan
டிச 22, 2025 00:29

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உமக்கு தெரியுமா?


ramani
டிச 21, 2025 05:16

பேசாமல் திமுகவை தடை செய்யலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இதுதான்


Barakat Ali
டிச 21, 2025 07:46

அது எளிதான காரியமில்லை .....


rama adhavan
டிச 21, 2025 03:17

நீதிபதி அவர்களின் நல்ல கருத்து. கொசு அடிக்க பீரங்கிகள் எதற்கு? ஒரு கேசுக்கு அதிக அரசு வக்கீல்கள் செல்வது என்பது அவர்களிடயே வேலை, கட்சிகாரர் இல்லை என சொல்லாமல் சொல்கிறது.


Kalyanasundaram Linga Moorthi
டிச 21, 2025 01:14

congratulations. all the best have to teach a lesson to dmk government


Siva Balan
டிச 20, 2025 23:47

பாகிஸ்தான் கைக்கூலி கட்சிகளுக்கும் இந்தியர்களுக்கும் நடக்கும் போர் இது.


முக்கிய வீடியோ