உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: பிப்.,15 ல் துவங்கி பிப்.,25 வரை நடக்கிறது

3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: பிப்.,15 ல் துவங்கி பிப்.,25 வரை நடக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் பிப்., 15 முதல் பிப்.,25 வரை நடக்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.உ.பி.,யின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாசார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022ல் துவங்கப்பட்டது. நவ.,16 முதல் டிச., 16 வரை நடந்த இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2023 டிச., 17 முதல் டிச., 30 வரை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் உ.பி., மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.இந்நிலையில் 3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிப்.,15 முதல் பிப்., 25 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார். இதற்கான முன்பதிவு நடைபெறுவதாக கூறியுள்ள அவர், இந்தாண்டு நடக்கும் நிகழ்ச்சியின் மையக்கருத்தாக, அகத்தியரின் தத்துவம் இருக்கும் எனக்குறிப்பிட்டார்.3வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள அகத்தியர் கோவில் மற்றும் சித்த மருத்துவம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்படும் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் பிப்.,1. பிப்.,2 அன்று நடக்கும் வினாடி வினா நிகழ்ச்சி மூலம் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ள மத்திய அரசு, இந்த ஆண்டு 1,200 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ray
ஜன 16, 2025 00:12

இங்கே வெளிநாடு வாழ் தமிழர்களை கூட்டினார் ஒடனே மோடி கிளம்பிட்டார் காசிக்கும் தமிழகத்துக்கும் ஏகஉறவுன்னு சொல்லி தாஜா பண்ணனும் தமிழ்நாட்டு நடப்புகள் உன்னிப்பா கவனிக்கப்படுகிறது மறுபுறம் மோசமான ஆட்சின்னு கூவிக்கொண்டே காப்பியடிக்கப்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் படுகிறதென்று தெரிந்தாலும் சொம்படிக்க இங்கே ஆட்களுக்கோ பஞ்சமில்லை 108 திவ்ய தேசங்களில் மூன்றே மூன்றைத் தவிர மற்ற எல்லாமே தமிழ்நாட்டில்தான் ஸ்ரீ ராமானுஜர் உபயம் அந்தளவுக்கு ஏமாளிகள்


Ramesh Sargam
ஜன 15, 2025 20:14

தமிழகத்தில் திமுகவினர் காசிமேட்டில், அதான் சென்னையின் மத்திய பகுதி, அங்கே பெரியாருக்கும், கருணாவுக்கும் ஒரு விழா எடுப்பார்கள்.


Sivramkrishnan Gk
ஜன 15, 2025 19:59

சரி கலந்துக்காத. நீ கலந்துக்களனு யார் அழுதா ?


venugopal s
ஜன 15, 2025 19:08

தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட,தமிழ் தெரியாத சங்கிகளால் நடத்தப்படும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி!


Ganesun Iyer
ஜன 16, 2025 04:06

₹200க்காக


sankaranarayanan
ஜன 15, 2025 18:53

திராவிட மாடல் அரசின் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்களா அங்கேயும் போய் பெரியாரின் தத்துவங்களை பேச முயல்வார்களா? பிறகு சிலைகள் வைத்து கடவுள் இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் இல்லவே இல்லை என்ற பதாகைகளை தூக்கி பிடித்தவண்ணம் இருப்பார்களா ? பிரதமர் மோடிக்கு தமிழுக்கு இருக்கும் பற்றை இவர்கள் குறை சொல்லவே முடியாது இவர்களுக்கு இருப்பதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாகவும் அவைகளை செயலிலேயே அவர் காண்பித்து வருகிறார் இனி இதுபோன்ற பிரதமர் நமக்கு கிடைக்கவே கிடைக்காது இது உண்மை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2025 17:29

தமிழனுக்கு மதமில்லை .... அவனுடைய கலாச்சாரத்துக்கு ஈடு இணை இல்லை .... தமிழர்களின் கலாச்சாரம் ஆன்மிகம் சார்ந்ததல்ல ன்னு நாங்க மந்திரிச்சு வெச்சிருக்கோம் ... தமிழனை திராவிடன் ன்னு சொல்லி மூளைச்சலவை பண்ணி வெச்சிருக்கோம் .... இதுக்கு இடைஞ்சலா இந்த நிகழ்ச்சி இருக்குதே ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை