அமராவதி: ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் 4 பேர் காருக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ynppgfnw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=010 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உதய்,8, சாருமதி,8, சாரிஷ்மா,6, மானஸ்வி,6, என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தனர்.3 பேர் பலி
அதேபோல், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர். இறந்தவர்கள் ஷாலினி, 5, அஸ்வின், 6, மற்றும் கவுதமி, 8 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.