உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழிவுநீர் தொட்டியில் 4 சடலங்கள்: ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்

கழிவுநீர் தொட்டியில் 4 சடலங்கள்: ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்ராலி: மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள வீட்டின் கழிவுநீர் தொட்டியில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் வர்மா கூறியதாவது:மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து இன்று மாலை நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது.செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் குழு, தொட்டியில் நான்கு உடல்களை கண்டெடுத்தது.இறந்தவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரன் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1ம் தேதி வீட்டிற்கு வந்தனர்.அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு உடல்கள் செப்டிக் டேங்கில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை