| ADDED : நவ 05, 2024 12:35 AM
அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா என்ற கிராமத்தில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள். குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு, சமீபத்தில், விவசாய வேலைக்கு கணவன் - மனைவி சென்றனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது, 2 - 7 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள், அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் எதிர்பாராதவிதமாக ஏறினர். அப்போது காரின் கதவு திடீரென மூடியது. வெளியே வர முடியாமல் தவித்த குழந்தைகள் மூச்சுத்திணறி உயிர்இழந்தனர். வீட்டுக்கு வந்த பெற்றோர், குழந்தைகளை காணவில்லை என தேடிய போது, காரில் அவர்கள் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.