உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜித்பவார் கட்சியினர் 4 பேர் சரத்பவார் கட்சியில் ஐக்கியம்: யாருக்கு பின்னடைவு?

அஜித்பவார் கட்சியினர் 4 பேர் சரத்பவார் கட்சியில் ஐக்கியம்: யாருக்கு பின்னடைவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தேசிய வாத காங்கிரஸ் அஜித் பவார் அணியின் 4 முக்கிய தலைவர்கள் இன்று (ஜூலை 17) சரத் பவார் அணியில் இணைந்தனர். சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், அஜித் பவாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத் பவாரிடமிருந்து பிரிந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு அணியாக பிளவுபட்டது. அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் இணைந்தார். அவர் மஹா., மாநில துணை முதல்வர் ஆனார். நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் மஹா விகாஸ் அகாதி கூட்டணி (காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான என்சிபி) 30 தொகுதிகளை கைப்பற்றியது.லோக்சபா தோல்வி காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாரின் ஆதரவாளர்கள் அஜித் காவ்ஹானே உட்பட 4 பேர் சரத்பவார் கட்சியில் இணைந்தனர். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அணியின் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:மஹா., மாநிலத்திற்காக கடந்த 60 ஆண்டுகளாக சரத் பவார் பணியாற்றி வருகிறார். அவரின் கொள்கை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எதிர்க்கட்சியினர் கூட பலர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதனால் தான் எங்களுடன் மீண்டும் இணைகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூலை 17, 2024 19:50

யானை வரும் முன் மணியோசை வரும் என்பதை போன்று சரத்பவார் கட்சி மீண்டும் உடையும் முன் அமலாக்கத்துறை ரைடு வரும்.


தினேஷ்நாயக்
ஜூலை 17, 2024 19:16

நாலு மட்டைகள் அந்தக் குட்டையிலிருந்து இந்தக் குட்டைக்கு மாறி, பிறகு இந்தக் குட்டையிலிருந்து அந்தக் குட்டைக்கு மாறிடிச்சுங்க. குட்டைதான் மாறியிருக்கு. மட்டைகள் அப்படியேதான் இருக்கு.


saravan
ஜூலை 17, 2024 18:47

காங்கிரஸ் லிருந்து பிரிந்துபோட தேங்காய் சிதறு தேங்காயாக உடைகிறது உடையாத காங்கிரஸ் எந்த மாநிலத்தில் உள்ளது?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ