உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்

மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது , பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர்.திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான கொடுமானைச் சேர்ந்த விஜயன் 57, என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை:அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது, பொதுவாக மக்கள் மாசுபட்ட குளங்கள், ஏரிகள் அல்லது குளோரின் சேர்க்கப்படாத குளங்களில் நீந்தும்போது அல்லது குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தேங்கி நிற்கும் நீரில் நீந்துவதைத் தவிர்ப்பது மற்றும் மூக்கைக் கழுவுவதற்கு முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு சுகாதாரதுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Field Marshal
நவ 06, 2025 11:08

மூணு நாள் முன்னாடி ராகுல் குளத்தில் மீன் பிடித்தார்


surya krishna
நவ 06, 2025 07:09

கிரிமினல் மூளை உள்ளவர்களின் மூளையை நன்றாக திங்கட்டும்


Ramesh Sargam
நவ 06, 2025 00:51

அமெரிக்க அதிபர் திரு ட்ரம்ப் ஒருவேளை இந்த தொற்றினால்தான் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆகையால்தான் அவர் தினம் தினம் ஏடாகூடமான அறிக்கைகளை அறிவித்து மற்ற தேசத்தினரையும், அவர் நாட்டு மக்களையும் சங்கடப்படுத்துகிறார்.


Anantharaman Srinivasan
நவ 05, 2025 21:11

அது ஏன் எந்த வியாதியாயிருந்தாலும் முதலில் கேரளாவை தாக்குகிறது..??


Ramesh Sargam
நவ 06, 2025 00:39

அதான் எனக்கும் புரியவில்லை? தாக்குவதுமட்டுமல்ல, அங்கிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கும் பரவுகிறது. கேரளா மக்கள் அவ்வளவு சுகாதாரம் அற்றவர்களா? இருக்க வாய்ப்பில்லையே இருவேளை தேங்காய் எண்ணெய் தலைக்கு தடவி குளிப்பவர்கள் அவர்கள்.


SENTHIL NATHAN
நவ 05, 2025 21:04

கடவுளின் தேசமாக இருந்த வரை நன்றாக இறுந்தது. மத மொழி தேச உணவு பழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் மக்கள் உயிர் உறிய ஆரம்பித்து உள்ளன. நல்லதே நடக்கும்


Narayanan K
நவ 06, 2025 08:00

சரியாக குறிப்பிட்டீர்கள். எல்லாவற்றிக்கும் காரணம் உணவு, கலாச்சார சீர்கேடாகும். இந்தியாவில் எங்கும் காணாத கேட்காத வெளிநாட்டு உணவுகளை சர்வ சாதாரணமாக அங்கு காணலாம். கடந்த 10-15 வருடங்களில் இந்த மாற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை