உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

 ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

புதுடில்லி: ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். டில்லியைச் சேர்ந்த யோகேஷ் சர்மா என்ற யோகி என்ற ரவுடி சமூக ஊடகத்தில், 'ஷாதாரா சூட்டர்ஸ்' என்ற குழுவை ஒரு சிறுவன் உருவாக்கினார். அந்தக் குழுவில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் இணைந்தனர். அந்தக் குழுவில் குற்றச்செயல்கள் வீடியோக்களை பலர் பதிவிட்டனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து, அதன் வீடியோவையும் இந்தக் குழுவில் பதிவேற்றி வந்தனர். அதைப்பார்த்து மேலும் சிலரும் இதுபோன்ற செயல்களில் இறங்கினர். கடந்த, 9ம் தேதி இரவு 10:40 மணிக்கு மானவ்,19, மற்றும் மூன்று சிறுவர்கள் ஒரு ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு மிரட்டினர். அப்போது, ஹோட்டலில் காவலாளி பதிலடி கொடுத்தார். இதில், மானவ் காலில் குண்டு பாய்ந்து சரிந்தார். ஆனால், நான்கு பேரும் ஒரு ஸ்கூட்டரில் ஏறி தப்பினர். இதுகுறித்து, ஹோட்டல் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மானவ் மற்றும் மூன்று சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு கார்கள்,- ஒரு ஸ்கூட்டர், ஒரு பைக், ஒரு மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 16, 2025 00:57

இந்தியாவில் சிறுவர்கள் கையில் துப்பாக்கி...? நான் எப்பொழுதும் அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை பற்றி கடுமையாக விமர்சிப்பேன். இப்பொழுது அதை நிறுத்திவிட்டு, இந்தியாவின் துப்பாக்கி கலாச்சாரத்தை பற்றி கடுமையாக விமர்சிக்கவேண்டும் போலிருக்கிறது. சிறுவர்கள் கையில் எப்படி துப்பாக்கி போன்ற சமாச்சாரங்கள்...? அப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள், தாங்கள் பெற்ற பிள்ளைகளை கண்காணிப்பதை விட்டுவிட்டு...? ஒருவேளை அவர்களும் அந்த கலாச்சாரத்தில் முழுகிவிட்டார்களா...? அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த தேவையற்ற கலாச்சாரத்திற்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா நிலைமைதான். எச்சரிக்கிறேன்.


சமீபத்திய செய்தி