உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி; பிரதமர் இரங்கல்

ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி; பிரதமர் இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாலாவார்: ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்த மாணவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. காலை 9 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது, சுமார் 60 முதல் 70 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நீண்ட காலமாக பள்ளிக் கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், அதனை சீர் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இரங்கல்

ராஜஸ்தானில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சமயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து கொடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Azar Mufeen
ஜூலை 25, 2025 22:07

பூமி, சூரியன் கடவுளின் ஆணையால் இயங்குகிறது சொல்லி வச்சிருக்கோம், கல்வியின் மூலம் பூமி சூரியனை காந்தப்புலம் ஈர்ப்பு விசையினால் சுற்றி வருதுன்னு உண்மை தெரிஞ்சிடும் .பெருந்தலைவர் இருந்ததால் கல்வியின் மூலம் மூடப்பழக்கம் குறைந்தது


Kulandai kannan
ஜூலை 25, 2025 18:15

ராஜஸ்தான், ஒரிசாவில் முதல்வர் களை மாற்றுவது பாஜகவுக்கு நல்லது. இருவருமே திறனற்ற கத்துக்குட்டிகள்.


சங்கி
ஜூலை 25, 2025 17:11

அடேய் முட்டா பசங்களா. அந்த கட்டிடம் ரொம்ப பழசு . பராமரிப்பு செய்யவில்லை. ஆனால் , இங்கே கட்டி, திறந்து ஒரு மாசத்துல இடியுது. ரெண்டுக்கும் வித்தியாசம் பார்க்க தெரியாத டாஸ்மாக் கும்பல்.


அப்பாவி
ஜூலை 25, 2025 12:54

அண்ணாமலை அறிக்கை விடுவாரா? முருகர் வாயத் திறப்பாரா?


Raja k
ஜூலை 25, 2025 12:15

ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் விடியாத திமுக அரசுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும், திமுக கட்சிகாரன் ஒப்பந்தத்தில் கட்டியது, 4 மாணவர் சாவுக்கு பொறுபேற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும், இந்த பள்ளி கட்டிடம் பழுது பார்க்க முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்கவில்லை,


அப்பாவி
ஜூலை 25, 2025 11:32

ஆம்... நேருதான் நிதி ஒதுக்கலை.


அப்பாவி
ஜூலை 25, 2025 11:31

இந்தியா முழுக்க ஒரே மாடல்தான். கட்டிடங்கள் டமால்தான்.


Venkateswaran Rajaram
ஜூலை 25, 2025 11:20

அதி விரைவில் திராவிட நாட்டில்


S Sivakumar
ஜூலை 25, 2025 11:12

ஊழலுக்கு திளைத்த அரசியல் அமைப்புக்கள் இதை பற்றி கவலை படாமல் உள்ளனர். அரசு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் இல்லை எனில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.


தியாகு
ஜூலை 25, 2025 11:03

ராஜஸ்தானில் குடியேறிய திமுகக்காரன் காண்ட்ராக்ட் எடுத்து கட்டியிருப்பான்.


புதிய வீடியோ