வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விழித்து கொண்டுள்ளோம் . நல்ல தீர்ப்பு .
மேலும் செய்திகள்
பெங்களூரு சிறப்பு ரயில்
04-Apr-2025
திருவனந்தபுரம் : கேரள மாநிலம், திருவனந்தபுரம், கரிப்பூரை சேர்ந்தவர் வினிதா, 38. திருவனந்தபுரம் அம்பலமுக்கு பகுதியில் செயல்பட்டு வந்த, நர்சரி கார்டனில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 2022 பிப்., 6ல், இவர் கார்டனில் இருந்த போது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே வெள்ளமடம், ராஜிவ் நகரை சேர்ந்த பட்டதாரியான ராஜேந்திரன், 40, கைது செய்யப்பட்டார்.வினிதாவின் கழுத்தில் கிடந்த, நான்கு சவரன் தங்கச் செயினுக்காக, இந்த கொலையை அவர் செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, திருவனந்தபுரம் ஏழாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாத நிலையில், தடயவியல் ஆதாரங்கள் இந்த வழக்கில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டன. 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 222 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ராஜேந்திரன், ஏற்கனவே வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த சுங்க அதிகாரி சுப்பையா 58, அவரது மனைவி வசந்தி 55, அவர்களுடைய வளர்ப்பு மகள் அபிஸ்ரீ, 13, ஆகிய மூன்று பேரை 2015-ல் கொலை செய்துள்ளதாகவும், அதைத்தொடர்ந்து வினிதாவையும் கொலை செய்ததாகவும் தெரியவந்தது.இந்த வழக்கில், ராஜேந்திரனுக்கு துாக்கு தண்டனையும், 8 லட்சத்து 10,500 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி பிரசூன்மோகன் தீர்ப்பளித்தார்.அபராத தொகையில் 4 லட்சம் ரூபாயை, வினிதாவின் குழந்தைகளுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விழித்து கொண்டுள்ளோம் . நல்ல தீர்ப்பு .
04-Apr-2025