திருப்பி கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இவரது மூத்த மகன் ராகுல். கார்கே குடும்ப அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே, தொழில் பயன்பாட்டிற்காக 5 ஏக்கர் நிலத்தை, கர்நாடக தொழில் துறை ஒதுக்கியது. இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. கவர்னரிடம் புகார் செய்தனர். பிரச்னை விஸ்வரூபமாக மாறியதால், 5 ஏக்கர் நிலத்தை கார்கே குடும்பத்தினர் திரும்பி கொடுத்தனர். இதனால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.