உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகை: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகை: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர், பந்த்ராதன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் நேற்று வீட்டில் இருந்த போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளனர். இதையறிந்த, அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காஸ் ஹீட்டர்களில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு தான் இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் குளிர்காலங்களில் ஹீட்டர்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குளிர் காலங்களில் எல்.பி.ஜி., ஹீட்டர்களை பயன்படுத்தும் போது, அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறும். அந்த சமயம் காற்று உட்புகாதபடி, கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருப்பது விபரீதத்தை ஏற்படுத்தும். எனவே, காஸ் ஹீட்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Krishnamurthy Venkatesan
ஜன 06, 2025 20:02

மிக கடுமையான குளிருக்கு rasai என்று சொல்லப்படும் quilt ஐ பயன்படுத்துவார்கள். அறை ஓரளவிற்கு சூடானதும் ஹீட்டர் அணைத்திருக்க வேண்டும். புகாரி என்ற கரி அடுப்பையும் பயன்படுத்துவார்கள். அப்போதும் கார்பன் monoxide வெளியேறும். அதுவும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும்.


vijay
ஜன 06, 2025 19:53

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது


vijay
ஜன 06, 2025 19:53

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது


ஆரூர் ரங்
ஜன 06, 2025 16:56

இதனால் தான் பல மேலைநாடுகளில் OIL FILLED மின்சார ஹீட்டர் பயன்படுத்துகின்றனர். ( எண்ணெய் லீக் ஏற்படாமல் மட்டும் பராமரிக்க வேண்டும்).


Sampath Kumar
ஜன 06, 2025 16:55

அறியாமை தான் காரணம்


Senthoora
ஜன 06, 2025 15:59

இதுக்கு ஒரே தீர்வு. ஒரு முனையில் ஜன்னலில் சிறு இடைவழி விட்டு சாத்தணும். மறு பக்கத்திலும் அதே ஒரு ஜன்னலை இடைவழி விட்டு மூடனும். அப்போ, இந்த காபநீர் மோனோ ஓகேசைட்டு வெளியேறும். இதைத்தான் மேல்நாடுகளில் செய்கிறார்கள். அரசு புரிந்துணர்வு சொல்லணும்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 14:32

புகையல்ல .... கார்பன் டை ஆக்ஸைடு அல்லது கார்பன் மோனாக்சைடு .... பெஸ்ட்டு என்ன ? போர்த்திப் படுத்தாலே போதும் ....


Senthoora
ஜன 06, 2025 15:54

கடுமையான குளிரில் உன் குழந்தைக்கு செய்து பாரு. அதரையிட்டீஸ், அஷ்துமா, கடைசியில் நீமோனியா வரும். தெரியாம பேசகூடாது தம்பி.


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 18:01

பதில் கொடுத்த திராவிடியால் ..... தலைப்பில் புகை என்று இருக்கிறது .... புகையென்றால் பார்க்க முடியும் .... நான் குறிப்பிட்ட வாயுக்களை பார்க்க முடியாது .... ஆபத்தானவையும் கூட .... ஆகவே அப்படி எழுதினேன் ..... மேலே நீயி எழுதியபடி சன்னலை கொஞ்சம் இடைவெளிவிட்டு மூடினாலும் - ஒரு ரூம் ஹீட்டரை பயன்படுத்தும் பட்சத்தில் - சிறிய ரக எக்ஸ்சாஸ்ட் ஃபான் கூட அறையில் இல்லாவிட்டால் - உறங்குபவர் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடால் மரணம் ஏற்படாவிட்டாலும் கூட, ஆக்சிஜன் குறைபாட்டால் தலைசுற்றல் மயக்கம் ஏற்படும் ....


முக்கிய வீடியோ