உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரபிக்கடலில் 500 கிலோ போதைப்பொருள் சிக்கியது!

அரபிக்கடலில் 500 கிலோ போதைப்பொருள் சிக்கியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரபிக்கடலில் 2 படகுகளில் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அரபிக்கடலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் இரண்டு படகுகளில் போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.அந்த படகுகளை சுற்றி வளைத்த, கடற்படையினர் அவர்களிடம் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த நபர்களை பிடித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இரண்டு படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mr Krish Tamilnadu
நவ 29, 2024 23:31

சிங்கம் 2 - ஹரியின் கற்பனை கதை என்று நினைத்தேன். ஆனால் இந்த ஆட்சியில் உண்மை கதை தான் என தெரிந்து விட்டது. உண்மையில் அந்த அமைச்சர் யார்? டோனி யார் என்று தான் தெரியவில்லை?. மாடல் ஆட்சியின் மயக்கும் சாதனையோ இது?. ஏற்கனவே கல்வியில் போட்டி அதிகரித்து கொண்டு செல்கிறது. தமிழக மாணவர்களை படிக்க விடுங்க சார்.


Ramesh Sargam
நவ 29, 2024 13:10

தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளவேண்டும். நிறைய கிடைக்கும். ஏன் என்றால் தமிழகம் இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம்.


duruvasar
நவ 29, 2024 12:52

கடுவுளே பிடிபட்ட அந்த இருவரும் தொப்புள் கொடி உறவுகளோ, மர்ம நபர்களாகவோ இருக்ககூடாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 12:09

அரபிக்கடலுக்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு? இலங்கையின் கடல் எல்லை அரபிக்கடலில் இல்லையே? அந்த கப்பல் ஓனர் இலங்கையோ?


Barakat Ali
நவ 29, 2024 10:57

எந்த நாட்டு கடல் எல்லையில் பிடிபட்டது என்கிற விபரம் இல்லை .... இலங்கையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால் இலங்கைக்கு அருகில் என்று ஊகித்தேன் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை