அமர்நாத் பனிலிங்கம்: மூன்று நாட்களில் 50,000 பேர் தரிசனம்
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத் குகைக்கோவிலில் தரிசனம் செய்வதற்காக 7,200 யாத்ரீகர்கள், பகவதி நகர் முகாமில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 50,000 பேர் தரிசனம் செய்துள்ளனர்.காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இமய மலையில் 12,729 அடி உயரத்தில் அமர்நாத் பனிலிங்கம் தோன்றுவது வழக்கம். இதை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் செல்வர்.இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை, கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக, 3.3 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அமர்நாத் யாத்திரைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.மொத்தம் 38 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில், ஜம்மு அடிமுகாமில் இருந்து மட்டும், 31,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 50,000 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.இதற்கிடையே கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தடை ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது பிரிவை சேர்ந்த 7,208 யாத்ரீகர்கள் ஜம்மு முகாமில் இருந்து இரு பிரிவுகளாக நேற்று புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 1,587 பெண்கள், 30 குழந்தைகள் இடம் பெற்றிருந்தனர். இதுவரை சென்றுள்ள குழுவில் இதுவே மிகப்பெரியது.