உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17வது குழந்தை பெற்றெடுத்த 55 வயது ராஜஸ்தான் பெண்

17வது குழந்தை பெற்றெடுத்த 55 வயது ராஜஸ்தான் பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில், 55 வயது பெண், 17வது குழந்தையை பெற்றெடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா, 55. அவரது கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு காவ்ரா குடும்பத்தை கவனித்து வருகிறார். ஏற்கனவே 16 குழந்தைகளுக்கு தாயானவர் ரேகா. அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. எஞ்சிய குழந்தைகளில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட்டது. மற்றவர்கள் தற்போது திருமண வயதை தொட்டுவிட்டனர். இந்நிலையில், 17வது முறையாக ரேகா கர்ப்பமடைந்தார். குடும்பத்தில் வறுமை வாட்டினாலும், குழந்தையை பெற்றெடுக்க காவ்ரா - ரேகா தம்பதி உறுதியுடன் இருந்தனர். இதையடுத்து, சமீபத்தில் ரேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட, அருகில் இருந்த தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்திருப்பதை மறைத்து, ஐந்தாவது பிரசவம் எனக் கூறி சேர்த்துள்ளனர். தற்போது குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். வறுமையில் வாடும் ரேகா குடும்பத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறந்திருப்பது அப்பகுதி மக்களை மட்டுமின்றி, 17வது குழந்தை என உண்மை அறிந்த மருத்துவர்களும் ஆச்சரியம் அடைந்து உள்ளனர். இதற்கிடையே, சொந்த வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஹாசினி
ஆக 28, 2025 19:17

சபாஷ் ! ஒவ்வொரு இந்தி பெண்ணும் பெற்றுக்கொள்ள வேண்டும் sorry India பெண்


vbs manian
ஆக 28, 2025 09:24

வருத்தமளிக்கிறது. பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமா.


ரங்ஸ்
ஆக 28, 2025 09:13

குழந்தைகள் வறுமையில் வாடினால் உணவு, தரமான கல்வி கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். நேர்மை சொல்லிக்கொடுத்து வளர்த்தால் கஷ்டப்பட்டாலும் முன்னேற வாய்ப்புண்டு. இல்லையென்றால் திருடர்களாக, சமூக விரோதிகளாக வாய்ப்பு அதிகம்.


ரங்ஸ்
ஆக 28, 2025 09:08

கின்னஸ் சாதனையில் இடம்பெறுவாரா?


Jramesh2000
ஆக 28, 2025 09:02

வீடு கட்டி விட்டு, எ/சி போட்டு , கிங் சைஸ் பெட் போட்டு தர வேண்டும் அரசு.


Barakat Ali
ஆக 28, 2025 08:19

...பெற்றுத்தள்ளுகிறார்கள் என்றல்லவா பரப்பப்படுகிறது ????


Haja Kuthubdeen
ஆக 28, 2025 08:52

அது முஸ்லிம் மக்களை மட்டுமே சொல்வார்கள்...


Svs Yaadum oore
ஆக 28, 2025 06:49

மூன்று தலைமுறைக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் 10 குழந்தைகள் பெற்று கொள்வது சாதாரணம் ...உடல் வலிமையோடு மன வலிமை எப்போதும் நல்ல எண்ணம் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற வாழ்க்கை இருந்தால்தான் இது சாத்தியம் .....இப்பொது இங்கு நடு ராத்திரி டாஸ்மாக்குடன் பிரியாணி தின்று விட்டு தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மையங்கள் ....இந்த பெண்மணிக்கு வீர தாய் என்ற பட்டம் வழங்கலாம் ....


Thravisham
ஆக 28, 2025 06:35

கவ்ரா வுக்கு பொழுது போவதற்கு டிவி வாங்கி கொடுஙகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை