உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்; ராஜஸ்தானில் நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் துவக்கம்!

55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்; ராஜஸ்தானில் நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: 'ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கியது. நாடு முழுதும் தற்போது பல்வேறு பொருட்களுக்கு 5, 12 மற்றும் 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளில் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி., சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில், ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும்; புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் உட்பட 148 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில், இன்று (டிச.,21) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கியது. 150க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரியை மாற்றி அமைப்பது, மருத்துவ, ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. விமான எரிபொருளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
டிச 21, 2024 16:09

மருத்துவக் காப்பீட்டுக்கு சேவை வரி விதித்த பசி மவுனம்.


அப்பாவி
டிச 21, 2024 14:08

ஐயய்யோ... இந்த தடவை என்னன்ன புதுசா உருவப் போறாங்களோ?


Saravanan
டிச 22, 2024 01:16

தங்கம் தென்னரசு என்ன செய்கிறார் அங்கே


hari
டிச 21, 2024 14:05

gst on rent for commercial buildings need to be removed. as it is not covered under reverse taxation. it will be burden on every commercial establishment


Kasimani Baskaran
டிச 21, 2024 13:53

அங்கு இடித்த புளி போல இருந்துவிட்டு வெளியே வந்தது உருட்டோ உருட்டு என்று உருட்டி மானத்தை வாங்குவார்கள் பணச்சிக்கல் மாநிலம் நம்பர் 1 ன் பிரதிநிதிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை