உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய 583 பொது பெட்டிகள் இணைப்பு! ரயில்வே நிர்வாகம் தகவல்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய 583 பொது பெட்டிகள் இணைப்பு! ரயில்வே நிர்வாகம் தகவல்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் தேவைக்கேற்ப பயணிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.இந் நிலையில் நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் புதியதாக இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப் குமார் கூறியதாவது; ரயில்களில் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு என்றுமே முன்னுரிமை உண்டு. அவர்களுக்கு அதிக வசதிகள் வழங்க ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 583 புதிய பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அவை 229 ரயில்களில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தில் மேலும் 1000 பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் கூடுதலாக இணைக்க திட்டமிட்டு உள்ளோம்.புதிய பெட்டிகள் இணைப்பு மூலம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடுதலாக பயணிக்கலாம். வரும் 2 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படும். அதில் 6000 பொது பெட்டிகள், 4000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகும். இந்த வசதிகள் வந்தபின்னர் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
நவ 20, 2024 21:06

5830 பொதுப் பெட்டிகள் போடற அளவுக்கு தேவை இருக்கு கோவாலு.


Vijay Kumar
நவ 20, 2024 12:42

குறை கூறாதீர்கள் நண்பர்களே கருத்துகளை பரிமாறுங்கள் ஏற்று கொள்வது ரயில்வேயின் கையில்


M Ramachandran
நவ 20, 2024 10:22

வந்தே பாரத் ரயிலும் கும்பல் ஏரி அழிச்சாட்டியம் பண்ணுது. பொது பெட்டிகள் சேர்த்தாலும் அடாவடி குறையாது. இங்கு பல்லவன் மற்றும் வைகை அதி விரைவு வண்டிகளில் 6 சாதாரண பெட்டிகள் இணைத்திருந்தும் reserved பெட்டிகளில் கும்பல் ஏறுது. பகல் வண்டிகளில் கட்டு படுத்த முடியாது. ஏஆர் என்றால் நம் தமிழக அரசின் வண்டியில் என்றால் நேரம் விரயம் மற்றும் காலரா ஓட்டலில் நிறுத்துவது நாத்தம் பிடித்த பாத்ரூமிற்கு அடவடி வசூல். காபி அல்லது tee மிக சிறிய பேப்பர் கப்பில் அநியாய விளக்கு விற்பது


ஆரூர் ரங்
நவ 20, 2024 10:21

பயணிகள் ரயில் விடுவதால் ரயில்வே க்கு 55 சதவீத நஷ்டம். சொகுசு மற்றும் சரக்கு ரயில் வருமானம் மூலமே சரிகட்ட வேண்டியுள்ளது. மேலும் மேலும் சாதாரண எக்ஸ்ப்ரஸ் ரயில்களை விட வேண்டுமானால் பாதை நெருக்கடியால் சரக்கு ரயில்களை குறைக்க வேண்டியிருக்கும் . அல்லது பயணக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும். பரவாயில்லையா?


Premanathan Sambandam
நவ 20, 2024 10:12

நல்ல விஷயம். பாராட்டுக்கள் பணக்கார "வந்தே பாரத் " ரயில்களைக் குறைத்து சாதாரண கட்டண ரயில்களை அதிகப்படுத்த வேண்டுகிறோம்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 20, 2024 10:01

தேவையான கூடுதல் ரயில்களை இயக்காமல் வெறுமனே பொது பெட்டிகளை மட்டும் சேர்ப்பது வெறும் கண்துடைப்புதான். இன்றைக்கு 35 வயதிற்கு மேல் பெரும்பாலோரால் 2 அல்லது 3 மணி நேரங்களுக்கு மேல் உட்கார்ந்துகொண்டு மட்டும் பயணிப்பது இயலாத காரியமாகி வருகிறது. எனவே இரவு இயக்கும் ரயில்களில் பொதுப்பெட்டிகளை இணைப்பதை விடுத்தது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக தாற்காலிகமாவாவது இணைக்க வேண்டும். ஆனால், போதுமான கூடுதல் ரயில்களை இயக்குவது ஒன்றுதான் நிரந்தர தீர்வு. அதுதான் நாட்டுக்கும் நல்லது. பெட்ரோலுக்கான அந்நியச்செலாவணியாவது மிச்சப்படும். இயற்கையும் காக்கப்படும். செய்வாரா மோடி?


R Hariharan
நவ 20, 2024 09:45

வந்த பாரத் தேவை இல்லை என்பது என் கருத்து பல இடங்களில் ரயில் சேவை நிறைய தேவை இருக்கு. பெங்களூரில் இருந்து நாகர்கோவில் தூத்துக்குடி ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் தென் மாவட்டங்களுக்கு. இதில் டிக்கெட் கிடப்பது என்பது அவ்வளவு எஅசி இல்லை. மைசூரு செங்கோட்டை, மைசூரு ராமேஸ்வரம், திருவந்திபுரம் சென்னை பகல்/iravu எக்ஸ்பிரஸ், செங்கோட்டை பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை கன்னியாகுமாரி, திருச்செந்தூர், தூத்துக்குடி,திருச்சிராப்பள்ளி செங்கோட்டை இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை ஹைதெராபாத், மும்பை, நியூ டெல்லி, கொல்கத்தா போன்ற பல ரயில் சேவை தேவை. மேலும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம், எர்ணாகுளம் வேளாங்கண்ணி, திருக்குறள் எக்ஸ்பிரஸ், கொங்கு எக்ஸ்பிரஸ், கொல்கத்தா-kanyakumari/trichy எக்ஸ்பிரஸ், மும்பை மதுரை எக்ஸ்பிரஸ், ஹுபள்ளி ராமேஸ்வரராம் எக்ஸ்பிரஸ் தினசரி விட வேண்டும். இவளையு தேவைகள் இருக்கும் பொது இதனை பூர்த்தி செய்து விட்டு பிராகவு வந்தே பாரத் விடலாம். மேலும் வந்தே பாரத் சில ரயில்கள் படிக்கு மேல் காலியாக சேல்கிறது. நாலு அல்லது இயைந்து மணி நேரம் சீட்டிங் செல்லலாம் அதற்கு மேல் சேட்டிங்கில் செல்வது முடியாத காரியம்.


chandrasekar
நவ 20, 2024 15:46

வந்தே பாரத் என்பது சாமானியர்களுக்கானது அல்ல. அது விமான பயணிகளை கணக்கிட்டு விடப்பட்டது. மேலும் சென்னை - மதுரை ஆம்னி பஸ் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் வந்தேபாரத் அதிகம் கிடையாது. கூடுதலாக பல ரயில்கள் விடப்படுகின்றன. நமக்கு பிடிக்காவிட்டால் அதில் பயணிக்க வேண்டாம். இன்றுவரை வந்தேபாரத் பெரும் வரவேற்புடன் ஓடுகிறது. அதனால் தான் 8 பெட்டி ரயிலை 16 பெட்டியாக மாற்றப்போகிறார்கள்.


veeramani
நவ 20, 2024 09:42

ரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் ....பொது பெட்டிகளை உட்கார்ந்து செல்லும் பெட்டிகளை சேருங்கள். இதனால் அனைவரும் பயன் பெறுவர். சுமார் 120 பயணிகள் இதில் பயணிக்கலாம்


பாமரன்
நவ 20, 2024 09:17

ஒரு வழியாக வந்தே பார்த்து நொந்தே பாரத்துன்னு இருந்துட்டு கொஞ்சம் பாமரன் பற்றியும் யோசிக்க ஆரம்பிச்சதுக்கு கோடானும் கோடி நன்றி.... ஆனால் இந்த 583 பொட்டிக்கு இம்மாம் பெரிய நியூஸ் பார்த்தா காடேஸ்வரா மார்கெட்டிங் அல்லது இப்போ ஸ்டாப் ஆகிட்ட அம்பது குமாஸ்தா வேலைக்கு போட்ட பெத்த பெத்த நியூஸ் தான் ஞாபகம் வருது... அட தமிழ் நாட்டில் குறுக்கா மறுக்கா ஓடறது மட்டுமே ஐநூறை தாண்டும்.. கிட்டத்தட்ட அத்தனையும் எக்ஸ்ப்ரஸ்தான்... அதுல ஒரு டப்பா மட்டுமே எக்ஸ்ட்ரா போட்டா மத்த மாநிலங்களுக்கு பிஸ்கோத்து தான்... இதுக்கு இவ்ளோ ஃபீலிங் ரெம்ப ஓவர்....


hari
நவ 20, 2024 11:47

ஷேர் ஆட்டோ வில் போகும் உனக்கே எவளோ கவலை...


பாமரன்
நவ 20, 2024 12:39

நான் ஷேர் ஆட்டோவில் போறதாவே இருந்தாலும் காசு குடுத்துட்டுதான் போகணும்... நீ அண்டா தூக்கும் பார்ட்டியா இருப்பியோ ..??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை