வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Over speed போனா வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது. Speed போறது கெத்துன்னு உயிரை விட்ட குடும்பம், நல்ல வேளையாக bike மீது மோதவில்லை. Bike மீது மோதியிருந்தா பாவம் bike ல போறவனும் பாவமா உயிரிழந்திருப்பான்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் மாவட்டத்தில், கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காரில் 13 பேர், குடும்ப விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். பாலோட் மாவட்டத்தில் கார் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் இருந்த 13 பேரில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.