உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்

ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திராவில் கிரானைட் குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.ஆந்திராவின் பபட்லா மாவட்டத்தில் பலிகுரவா பகுதியில் சத்யகிருஷ்ணா என்ற பெயரில் கிரானைட் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அங்கு 16 பேர் வேலை பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், 10 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் சந்திரபாபு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 03, 2025 17:17

செத்தவங்க ஓடிஷா ஆளுங்க. அங்கேயும் டபுள் இஞ்சின் சர்க்கார் ஆட்சி நடக்குது. பஞ்சம் பொழைக்க தெற்கே அனுப்பிடறாங்க.


அப்பாவி
ஆக 03, 2025 17:15

ஆந்திராவிலும் டபுள் இஞ்சின் சர்க்கார் மாதிரி ஆட்சிதான் நடக்குது. வளர்ச்சி சூப்பர்.


SANKAR
ஆக 03, 2025 16:11

Stalin responsible.Must resign


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை