உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைதி பள்ளத்தாக்கில் புதிதாக 6 தும்பிகள்

அமைதி பள்ளத்தாக்கில் புதிதாக 6 தும்பிகள்

பாலக்காடு: பாலக்காடு அருகே அமைதி பள்ளத்தாக்கில், புதிதாக ஆறு தும்பிகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு வனப்பகுதியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில், வனத்துறை மற்றும் தும்பிகள் ஆய்வு சங்கம் இணைந்து, அக்., 10 முதல் 12ம் தேதி வரை தும்பிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டன. இதில், புதிதாக ஆறு தும்பி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து, அமைதி பள்ளத்தாக்கு வனச்சரக உதவி வனகாப்பாளர் விஷ்ணு கூறியதாவது: கணக்கெடுப்பில் மொத்தம், 83 வகையான தும்பி கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், ஆறு புதிய தும்பி இனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அமைதி பள்ளத்தாக்கில் காணப்படும் தும்பி இனங்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. சுள்ளிவாலன் சோலைக்கடுவ, சூடன் பெரும்கண்ணன், நிழல் கோமரம், நீலக்கழுத்தன் நிழல்தும்பி, வயநாடன் அருவியன், மஞ்சகருப்பன் முளவாலன் ஆகிய ஆறு தும்பி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அருவியன் தும்பிகள் இருப்பது, அப்பகுதியில் உள்ள அருவிகளின் ஆரோக்கியமான நிலையை உறுதிப்படுத்துகிறது என, கணக்கெடுப்பு குழு தெரிவித்தது. வடக்கு அருவியன், செங்கப்பன் அருவியன், வயநாடன் அருவியன் ஆகிய தும்பிகள், இப்பகுதியில் இருப்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில், உயரமான பகுதிகளில் மட்டுமே காணப்படும் காட்டுமுளவாலன் தும்பியும் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் தீக்கருப்பன், சதுப்பு முளவாலன், வடக்கு முளவாலன், நீலக்கழுத்தன் நிழல் தும்பி, புள்ளி நிழல் தும்பி, குங்கும நிழல் தும்பி ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வில் வனத்துறை அதிகாரிகளும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 37 தன்னார்வலர்களும் பங்கேற்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை