உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயி கொலை வழக்கில் மைத்துனி உட்பட 6 பேர் கைது

விவசாயி கொலை வழக்கில் மைத்துனி உட்பட 6 பேர் கைது

கலபுரகி: விவசாயி கொலை வழக்கில், மைத்துனி, அவரது காதலன் உட்பட ஆறு பேர், கைது செய்யப்பட்டு உள்ளனர்.கலபுரகி, கமலாபூர் ஒகாலி கிராமத்தில் வசித்தவர் அம்பாராய் படேதார், 35; விவசாயி. கடந்த மாதம் 31ம் தேதி, ஒகாலி கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் இறந்து கிடந்தார். அவரது பைக்கும் அருகே கிடந்தது. விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று, போலீசார் நினைத்தனர்.அம்பாராயை யாரோ கொன்று விட்டதாக, அவரது மனைவி, கமலாபூர் போலீசில் புகார் செய்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், தலையில் ஆயுதங்களால் பலமாக தாக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் கொலை நடந்த இடத்தில், பதிவாகி இருந்த மொபைல் போன் டவரை வைத்து, போலீசார் விசாரித்தனர்.ஒகாலி கிராமத்தை சேர்ந்த ராஜு, 27, அவரது நண்பர்கள் அருண்குமார், 26, சாஹேப் படேல், 27, வீரேஷ், 26, சித்தய்யசாமி, 25 ஆகியோரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில், அம்பாராயின் மைத்துனி அம்பிகா, 23 என்பவருக்கும், தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அம்பாராய் தனது மைத்துனி அம்பிகாவின் மீது, கண் வைத்துள்ளார்.அவரை எப்படியாவது திருமணம் செய்யவும், நினைத்து உள்ளார். தன்னை திருமணம் செய்யும்படி, அம்பிகாவுக்கு தொல்லை கொடுத்து உள்ளார். இதுபற்றி அம்பிகா, காதலன் ராஜுவிடம் கூறினார். தனக்கு தொல்லை தரும் அம்பாராயை தீர்த்துக்கட்டும்படி கூறியுள்ளார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து, அம்பாராயை, ராஜு தீர்த்துக் கட்டியது, விசாரணையில் தெரிந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி