உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 ஆண்டு கால ராஜதந்திர உறவு: இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் சலுகை

60 ஆண்டு கால ராஜதந்திர உறவு: இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் சலுகை

சிங்கப்பூர்: இந்தியா - சிங்கப்பூர் இடையே ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதன் 60 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.இது குறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (எஸ்.டி.பி.,) இந்தியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்திய இயக்குநர் மாரகஸ் டான் கூறியதாவது:இந்தியாவுடன் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளை கொண்டாடும் வேளையில், எங்கள் நாட்டுக்கு பயணிக்கும்படி அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.சிங்கப்பூர், இந்திய பயணிகளால் மிகவும் விரும்பப்படும் இடமாக இருக்கிறது. இந்தாண்டுஜனவரி முதல் டிசம்பர் வரை, சிங்கப்பூரில் கேபிடாலேண்ட் மால்கள், சாங்கி விமான நிலையக் குழுமம், அயன் ஆர்ச்சர்ட், ஜுவல் சாங்கி விமான நிலையம், பாரகன் மற்றும் முஸ்தபா ஆகிய இடங்களுக்குச் செல்லும் இந்திய பயணிகள், கவர்ச்சிகரமான சலுகைகளை அனுபவிப்பார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் உள்ள 12 முன்னணி பயண முகவர்களும் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களும் 2025ம் ஆண்டில் சிங்கப்பூருக்கான பயணத்தை ஊக்குவிக்க, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.சிங்கப்பூர் தற்போது இந்தியாவின் 17 நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில், இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Haja Alaudeen
ஜன 25, 2025 20:34

ரொம்ப ஹாப்பி சிங்கப்பூர் தமிழ்


raajphoto raaj
ஜன 24, 2025 19:09

நன்றி


SIVA NANDAM
ஜன 23, 2025 21:42

நல்லது , நேரம் ,பணம் இருப்பவர்கள் கண்டிப்பாக சென்று வரலாம்


சமீபத்திய செய்தி