உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொதுத்துறை வங்கியில் 600 அப்ரென்டிஸ் பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!

பொதுத்துறை வங்கியில் 600 அப்ரென்டிஸ் பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பொதுத்துறை வங்கியில் 600 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 24.நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான மஹாராஷ்டிரா வங்கியில் அப்ரென்டிஸ் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 279, ம.பி., 45, உ.பி., 32, குஜராத் 25, தமிழகம் 21 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000

தேர்ச்சி செய்யப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை