வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போட்டி வாந்ததும் விலகல் வந்ததா , . ....விலகல் வந்ததும் பொட்டி வந்ததா .........
புதுடில்லி; பீஹாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 61 பேர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த விபரத்தை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.பீஹாரில் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.இதில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 1690 பேரின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.அவர்களில் 315 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 1375 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந் நிலையில், முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் 121 தொகுதிகளில் இருந்து 61 வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றிருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பாட்னா மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். இது தவிர, தர்பங்காவில் 8 பேர், பெகுசராயில் 7 பேர், கோபால்கன்ஜில் 6 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். 1375 வேட்பாளர்களில் 61 பேர் வாபஸ் பெற்றுள்ளதால் தற்போதுள்ள நிலவரப்படி 1314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.2ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்படும் தேதி அக்.23 என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 2 கட்ட ஓட்டுப்பதிவும் முடிந்த பின்னர், நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
போட்டி வாந்ததும் விலகல் வந்ததா , . ....விலகல் வந்ததும் பொட்டி வந்ததா .........