உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, இதற்காக ரூ.63,246 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 119 கி.மீ., தூரத்தில் மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டமானது மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையே 50: 50 விகிதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. 3 வழித்தடங்களில் 120 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.முதல் வழித்தடமானது மாதவரம் முதல் சிப்காட் வரையிலும்2வது வழித்தடம் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலும்3வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்த போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்து இருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.63,246 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.கூட்டம் முடிந்த பிறகு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: வேகமாக வளர்ந்து வரும் நகரான சென்னை மிக முக்கிய பொருளாதார மையமாகும். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2027ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மோடி வாழ்த்து!

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சென்னை மெட்ரோ திட்டம் போக்குவரத்தை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்; பரபரப்பான நகரில் மக்கள் வாழ்வை எளிதாக்கும் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Venil
அக் 04, 2024 12:15

தமிழகத்தின் முக்கியத்துவமும், முதல்வரின் முறையான அழுத்தமும் அதனை இப்பொழுது மத்திய அரசு உணர்ந்துள்ளதும் தெரிய வருகிறது. இனி கூட்டாட்சியில் பாரபட்சம் கூடாது என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்


venugopal s
அக் 04, 2024 11:47

மொத்த திட்டச் செலவான அறுபத்து மூன்று ஆயிரம் கோடி ரூபாயையும் மத்திய பாஜக அரசு கொடுக்கப் போவதில்லை. மாநில மத்திய அரசுகள் சமமாக ஏழாயிரத்து நானூற்று இருபத்தைந்து கோடி மட்டுமே கொடுப்பார்கள். தமிழக அரசு தனது பங்கைக் கொடுத்து விட்டது, மத்திய பாஜக அரசு இப்போது தான் அவர்கள் பங்களிப்பை கொடுக்க ஒப்புக் கொண்டு உள்ளனர். மீதித் தொகை எல்லாம் கடன் தான். இதற்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டம்!


Saai Sundharamurthy AVK
அக் 04, 2024 11:00

திமுகவினால் கொள்ளையடிக்க முடியாது என்பதினால் திட்டத்தை மத்திய அரசிடம் கொடுத்து விட்டது போலும்..... ! மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த அண்ணாமலை வாழ்க..... !


சாண்டில்யன்
அக் 04, 2024 10:21

மெட்ரோ ரயில் திட்டங்கள் "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை"யின் கீழ் வருகிறது அப்படியிருக்க துறை மந்திரியான மூத்த மனோகர்லால் கட்டார் அல்லாமல் இதில் சம்பந்தமில்லாமல் ரயில்வேத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் எங்கே வந்தார்? இது சரியான புரிதல் இல்லாததன் விளைவா?


panneer selvam
அக் 04, 2024 22:16

metro projects ution is under railway ministry


சாண்டில்யன்
அக் 05, 2024 00:03

பன்னீர்செல்வம் நண்பரே மினிஸ்ட்ரி ஆப் ஹௌசிங் அண்ட் அர்பன் Affairs என்ற வலை பக்கத்தை தட்டி விபரம் அறிந்து கொள்ளலாம் சுபர்பன் ரயில்கள், MRTS மெட்ரோ ஆகியவை நகர போக்கு வரத்து தனி ஹட்டப்ஸ்://என்.விக்கிபீடியா.ஒர்க்/விக்கி/அர்பன் _ரயில்_ட்ரான்சிட்_in_India வலைத்தளத்தையும் காணவும்


சாண்டில்யன்
அக் 05, 2024 09:38

நண்பரே மீண்டும் சொல்கிறேன் "சென்னை மெட்ரோ... நிதி அரசியல்" எனும் யூ ட்யூப் கண்டு தெளிவு பெறவும்


சாண்டில்யன்
அக் 04, 2024 09:55

இதற்காக ரூ.63,246 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. - செய்தி பலே அப்டீன்னா ஜப்பான் நிறுவனத்திடமிருந்து நாம் கடன் வாங்க வேண்டியிருக்காது தமிழ்நாடு அரசும் செலவழிக்க வேண்டியிருக்காது வேலை விறுவிறுப்பா நடந்து சீக்கிரமே முடிஞ்சுடும்


Dharmavaan
அக் 04, 2024 06:27

இது போல் மிரட்டிய பிறகு கொடுப்பது மோடிக்கு கேவலம் .மற்ற முதலமைச்சங்களும் இதை செய்வார்கள்


Kasimani Baskaran
அக் 04, 2024 05:13

எய்ம்ஸ் விஷயத்தில் ஸ்டிக்கர் அரசுதான் நிலமெடுப்பதில் தாமதமும், தனது பங்கு நிதியையும் ஒதுக்குவதில் சொதப்பியது.


சாண்டில்யன்
அக் 04, 2024 08:04

எழும்பூர் பீச் நாலுவழி பாதை அமைக்க முதலில் செய்த காரியம் MRTS தண்டவாளங்களை பிய்த்து வீசியதுதான் நாலு கிலோமீட்டர் பாதை அமைக்க எத்தனை காலம் ஆகுமோ அந்த ஜெனரல் மானேஜருக்கே தெரியாது? தாம்பரம் பீச் சுபர்பன் பிராட்கேஜ் மாற்ற மூன்றே மாதங்களில் முடித்தார்கள் இந்த இழுபறிக்கு காரணமாக அவர் சொல்வது என்ன தெரியுமா மத்திய கப்பல் படை நிலத்தையும், மத்திய ரிசர்வ் வங்கியின் இடத்தையும் பெறுவதில் சிக்கல் என்கிறார் இங்கே சொதப்புவது தமிழக அரசாப்பா?


பாமரன்
அக் 04, 2024 08:11

என்னங்க காசி... இப்போல்லாம் ரொம்ப சொதப்புறீங்க... முதலில் இது முழுவதும் மத்திய அரசின் திட்டம்.... மாநில அரசு பயனாளர் மட்டுமே.... அடுத்ததா எடுக்கப்படாத நிலத்திலா ஆசுபத்திரி கட்ட நம்ம ஜி அஞ்சு வருஷம் முன்னாடி கல்லு நட்டுட்டு போனாப்ல...?? அப்புறம் இந்த திட்டத்தில் நில கையகப்படுத்தும் வேலை மட்டுமே தமிழ் நாடு அரசு செஞ்சது அதுவும் எடுபுடி அரசு... நீங்க சொல்ற ஸ்டிக்கர் அரசு செஞ்ச குற்றம்னா நம்ம ஜி நட்டுட்டு போன ஒத்த செங்கல்ல லவட்டிட்டு போனது மட்டுமே... பார்த்து எழுதுங்க காசி... நீங்க பழைய பகோடா... அப்ரசண்டிக மாதிரி எழுதாதீங்க... ஓகேவா...


சாண்டில்யன்
அக் 04, 2024 13:23

பாமரன் ஒன்றும் பாமரனில்லையென்பதும் யாரு பாமரன்ன்னு இப்போதானே தெரியுது


panneer selvam
அக் 04, 2024 00:47

Go and check what is the progress of AIIMS in Madurai ? Do not live in past . Even one brick was stolen by Dy CM Udaynidhi ji , still the project is moving on with good progress and shall be completed in 18 months time. Trust till that time , you will be alive and see yourself


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 23:38

திமுக ஆட்சியை அகற்றும்வரை நிதியை நிறுத்தி வைத்தால் நல்லது.


பாமரன்
அக் 03, 2024 23:35

இதில் பெரிதும் ஸ்கோர் பண்ணப்போவது டீம்காவும் பகோடா கம்பெனியும் தான்.... கஷ்டப்பட்டு திட்டத்தை வடிவமைத்த எடுபுடி அரசுக்கு கெட்ட பெயர்... எப்படின்னா... ஃபர்ஸ்டுக்கா நான் நேராக போய் கேட்டதும் மத்திய அரசு ஒத்துக்கிட்டதுன்னு ஸ்டாலின் காலர் தூக்கி விட்டுப்பாப்ல... அப்பாலிக்கா... முந்தைய ஆயிடீம்கா அரசு பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் மத்திய அரசு பார்டிசிபேஷன் ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு பெரிய திட்டத்தை விளம்பரத்துக்காக ஆரம்பித்ததுன்னு சொல்லி நாங்க மட்டும் இல்லைன்னா மாநில நிதி நிலைமை மோசமாகி இருக்கும் அப்பிடின்னு ஆயிடீம்கா ஸ்கோர் பண்ணும்... அடுத்ததா தமிழ் நாட்டை என்றுமே நாங்க கைவிடலைன்னு பகோடா கம்பெனி குறுக்கு சால் போடும்... ஆனால் இதை வச்சு ஸ்கோர் பண்ண டீம்கா விடாதுங்கறது தனி மேட்டர்... மொத்தத்தில் ஆயிடீம்கா தான் பாவம்... மக்களுக்கு நிம்மதி...


சமீபத்திய செய்தி