மது அருந்தி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து 65 அதிநவீன ஆம்புலன்ஸ் சேவை துவக்கிவைப்பு
பெங்களூரு: ''மொபைல் போனில் பேசியபடி, வாகனம் ஓட்ட வேண்டாம். மது அருந்தி விட்டு, வாகனங்கள் ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.சுகாதார துறை சார்பில், புதிதாக 65 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த ஆம்புலன்ஸ் சேவையை, முதல்வர் சித்தராமையா, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:முதல்வரின் அவசர சேவை திட்டத்தின் கீழ், 65 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், பொதுமக்களின் சேவைக்கு கிடைக்கும். விபத்து நடக்கும்போது, கோல்டன் ஹவர் எனும் முதல் 1 மணி நேரம் மிகவும் முக்கியம்.*உயிர் காப்புஅந்த ஒரு மணி நேரத்தில், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து, அவசர கால சிகிச்சை அளிப்பது மிக அவசியம். அப்படி செய்தால், ஏராளமானோர் உயிரை காப்பாற்ற முடியும்.இதை கருத்தில் கொண்டு, புதிதாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டன. அதுவும் அதிநவீன வசதிகள் கொண்டவை. விரைவில் மாநிலம் முழுதும் அதிநவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால், பெரும்பாலான விபத்துகள் தடுக்க முடியும்.மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தை, ஆதரவற்றவர்களாக மாற்றி விடாதீர்கள். மொபைல் போனில் பேசியபடி, வாகனம் ஓட்ட வேண்டாம். உங்களுடைய உயிருக்கு, நீங்கள் தான் பொறுப்பு.*விதிகள்உங்களுடைய குடும்பத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு. எனவே தயவு செய்து போக்குவரத்து விதிகளை கடைபிடியுங்கள். மது அருந்திவிட்டு, வாகனங்கள் ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநிலத்தில் ஆண்டுதோறும் 40,000 சாலை விபத்துகள் நடக்கின்றன. சராசரியாக 10,000 பேர் இறக்கின்றனர். எனவே தான் விபத்துகளை தடுப்பதற்காக, முதல்வர் பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட இலவச ஆம்புலன்ஸ்கள் பொது மக்களுக்கு கிடைக்க உள்ளன.தினேஷ் குண்டுராவ், அமைச்சர், சுகாதாரத் துறைகூடுதல் ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு, போக்குவரத்து துறை சார்பிலும் நிதி ஒதுக்கப்படும். சாலை விபத்துகளுக்கு என்று தனியாக ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது சிறப்பு திட்டம். விபத்துகளில் உயிர்பலியை தடுப்பது இதன் நோக்கம்.ராமலிங்கரெட்டி, அமைச்சர், போக்குவரத்துத் துறை
சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
* அதிக விபத்து நடக்கும் பகுதிகளில், அதிநவீன ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளன* அவசர காலத்தில் உதவும் வகையில், உயிர் காக்கும் கருவிகளான வென்டிலேட்டர் வசதி உள்ளது* மருந்துகள், ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்கள் உள்ளன.