உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்த 66 சதவீத தொழிலதிபர்கள்: கருத்துக்கணிப்பில் அம்பலம்

அரசின் ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்த 66 சதவீத தொழிலதிபர்கள்: கருத்துக்கணிப்பில் அம்பலம்

புதுடில்லி: இந்தியாவில் உள்ள 66 சதவீத தொழிலதிபர்கள், அரசின் சேவையை பெற லஞ்சம் கொடுத்து உள்ளதாக கூறியுள்ளன.இது தொடர்பாக 'ஆன்லைன் சர்க்கிள்' என்ற அமைப்பு லஞ்சம் தொடர்பாக மே 22 முதல் நவ.,30 வரை ஆன்லைன் வாயிலாக சர்வே ஒன்றை நடத்தியது. இதில், கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் 159 மாவட்டங்களில் 66 சதவீத தொழிலதிபர்கள் அரசின் பணிகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசு பணிகளுக்கு தேவையான பொருட்களை விநியோகம், ஒப்பந்தம் பெறுவது, உத்தரவை பெறுதல், பணிகளுக்கான பணத்தை பெற லஞ்சம் கொடுத்து உள்ளனர்.லஞ்சப்பணத்தில் 75 சதவீதம், சட்டம், உணவு, மருந்து, சுகாதாரம், மெட்ராலஜி ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.மேலும் ஆய்வில் பங்கேற்ற 18 ஆயிரம் பேரில் 54 சதவீதம் பேர், லஞ்சம் கொடுக்க நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம் எனவும், 46 சதவீதம் பேர், அதிகாரிகள் நடவடிக்கையை வேகமாக செய்ய வேண்டும் என்பதற்காக விருப்பப்பட்டு லஞ்சம் கொடுத்தோம் எனக்கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jay
டிச 08, 2024 22:30

அப்படித்தானே திமுக அதானிடம் வாங்கும் ஒவ்வொரு வாட் மின்சாரத்திற்கும் இவ்வளவு லஞ்சம் என்று கணக்கு போட்டு வாங்கிக் கொண்டார்கள்.


Ramesh Sargam
டிச 08, 2024 19:43

அவனின்றி ஒரு அணுவும் அசையாது. அதேபோல, இந்தியாவில் பல மாகாணங்களில் அரசின் ஒப்பந்தம் வேண்டுமென்றால் லஞ்சம் இன்றி அந்த திட்டம் நிறைவேறாது. இந்தியாவில் லஞ்சம் ஒழிந்தால், இந்தியா வளர்ச்சிப்பாதையில் தடையின்றி செல்லும்.


Sivagiri
டிச 08, 2024 19:42

மீதம் உள்ள 34 பெர்சென்ட் பேர் , கட்சிக்காரங்க - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் மந்திரிகள் - வட்ட மாவட்டங்கள் - அவர்களின் பினாமிகள் - - இதெல்லாம் ஒரு அதிர்ச்சி அடைய வேண்டிய ரகசியமா ? . .


sankar
டிச 08, 2024 18:27

அலைக்கற்றை வழக்கில் இடம்பெற்ற - டாடா கம்பெனி பெண்மணி நீரா ராடியா அப்படித்தானோ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை