உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீ விபத்து 7 பேர் பலி

தீ விபத்து 7 பேர் பலி

புதுடில்லி,தலைநகர் டில்லியின் அலிபூரில் உள்ள தயாள்பூர் சந்தை பகுதியில் அமைந்துள்ள பெயின்ட் தொழிற்சாலையில், நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், நான்கு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கு முன், தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரசாயனங்கள் காரணமாக, இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை