உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் பயங்கர விபத்து 4 பெண்கள் உட்பட 7 பேர் பலி

தெலுங்கானாவில் பயங்கர விபத்து 4 பெண்கள் உட்பட 7 பேர் பலி

வாரங்கல்: தெலுங்கானாவில், ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றபோது லாரி மோதிய விபத்தில், குழந்தை, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம் வாரங்கல் - மாமுனுாரு சாலையில் தண்டவாளத்துக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை சென்றது. பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இரு ஆட்டோக்களை லாரி முந்த முயன்றது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஆட்டோக்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் விழுந்து ஆட்டோக்களில் சென்ற குழந்தை மற்றும் நான்கு பெண்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஆறு பேர் காயம் அடைந்தனர். விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை