உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்

வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் வெறிநாய் கடித்த 7வயது சிறுமி, ரேபிஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில், ஏழு வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 8ம் தேதி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, ​​ஒரு தெருநாய் கடித்தது. உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கும், பின்னர் தாலுகா மருத்துவமனைக்கும் குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர். காயம் சுத்தம் செய்யப்பட்டு, குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது.ரேபிஸ் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தும், சிறுமிக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். கேரளாவில் ஒரு மாதத்திற்குள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது குழந்தை உயிரிழந்துள்ளது. முன்னதாக, பத்தனம்திட்டாவின் 13 வயது பாக்யலக்ஷ்மி மற்றும் மலப்புரத்தின் தேனிப்பாலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் இந்த தொற்றுக்கு ஆளாகினர். கடந்த 2021ம் ஆண்டு முதல் கேரளாவில் தடுப்பூசி பெற்ற போதிலும் 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறை தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Balasubramanian
மே 05, 2025 11:55

பாவம் அந்த சிறுமி! நீட் தேர்தல் என்றால் முதல்வர் உடனே நடவடிக்கை எடுப்பார் ஆறுதல் மற்றும் காசோலை அறிவிப்பார்! இல்லை என்றால் கள்ள சாராயம் சாவாக இருக்க வேண்டும்!


KRISHNAN R
மே 05, 2025 11:52

யூ கே.. நாட்டில்,,, விதி முறைகள் படி,, பதி நான்கு நாட்களுக்கு... பிடிபடும் விலங்குகள்.... "புட் டூ ரெஸ்ட் "... முறை உள்ளதாக தெரிகிறது


Svs Yaadum oore
மே 05, 2025 11:46

தடுப்பூசி பெற்ற போதிலும் 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனராம்.. Anti-rabies வாசின் மட்டும் போதாது ..Anti rabies immunoglobulin என்பதும் முக்கியம் என்பது டாக்டர்கள்... இது பற்றி விபரம் தெரிந்த டாக்டர்கள் மக்களுக்கும் மற்ற டாக்டர்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும் ...ரேபிஸ் வந்து இறப்பது மிக கொடுமையான விஷயம் ....இங்குள்ள லஞ்ச ஊழலில் தெரு நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த மாட்டார்கள் ..


MUTHU
மே 05, 2025 13:19

ரேப்பிஸ் வந்து விட்டால் அந்த நோயாளிகளை சுட்டு கொன்று விடலாம். அந்தளவு கொடூர சித்திரவதை அனுபவிப்பார்கள். இந்தியர்கள் அறிவற்றவர்கள். இதுவெல்லாம் தெரிந்தும் சொறிநாயை விசனம் இன்றி கட்டிப்பிடித்துக்கொண்டு செல்வார்கள். பாசக்காரர்களாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 05, 2025 11:46

போட்டது தடுப்பூசியா இல்ல டிஸ்டில்ட் வாட்டரா ??


Nellai tamilan
மே 05, 2025 11:29

தெருவுக்கு தெரு நூற்றுக்கணக்கில் நாய்கள் அலைகின்றது. தெருவுக்கு 4 நாய் என்று கணக்கு வைத்து மிச்சம் இருக்கும் அனைத்து நாய்களையும் சைனாவுக்கு ஏற்றுமதி செய்யலாம்.


sridhar
மே 05, 2025 10:23

குறிப்பாக கேரளாவில் expire ஆன தடுப்பூசி தான் காரணம்.


raghavan
மே 05, 2025 10:13

தெரு நாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்துங்க ன்னு சொன்னாலும் கேட்பதில்லை. எனக்கு தெரிந்து ஒரு மருத்துவரின் மகனே முகத்தில் நாய் கடித்து அந்த நாய் ஒரு வாரத்தில் இறந்து அடுத்த 2 நாட்களில் இறந்துவிட்டார். தடுப்பூசி செயல்படும் முன் ரேபிஸ் தாக்கி விட்டது. வெயில் காலத்தில் தெரு நாய்களுக்கு சரியான உணவு நீர் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்ற வாரம் ஒரு ATM மையம் சென்ற போது அதன் வாசல் அருகே மூன்று தெரு நாய்கள் ஆக்ரஷத்தோடு வாயில் எச்சிலோடு முறைத்து முறைத்து பார்த்தன. எடுத்தேன் பாரு ஓட்டம் என்ற கதையா 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த வேறு ATM இடத்துக்குப் போனேன்.


MUTHU
மே 05, 2025 10:55

நீட் மரணம் என்றால் கவனிப்பார்கள். அதுதான் அவர்கள் வாய்க்கு கிடைத்த அவல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை