உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரம் 70 மணி நேர வேலை... இதுக்காகத்தான் சொன்னேன்; நாராயண மூர்த்தி விளக்கம்

வாரம் 70 மணி நேர வேலை... இதுக்காகத்தான் சொன்னேன்; நாராயண மூர்த்தி விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: இந்தியர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் குறித்து இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார். கோல்கட்டாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது: உலகில் தலைசிறந்த நிறுவனங்களுடன் எங்களை ஒப்பிட்டு பார்ப்போம். நாங்கள் சிறந்து விளங்குவோம் என்று கூறுவேன். இப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியது உள்ளது என்று கூறுவேன். நமது எண்ணங்களை உயர்வாக வைக்க வேண்டும். ஏனெனில், நாட்டில் 80 கோடி இந்தியர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். அப்படியானால், 80 கோடி பேர் இன்னும் வறுமையில் இருக்கின்றனர். நாம் கடினமாக உழைக்கவில்லை எனில், யார் உழைப்பார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே வறுமைக்கு எதிரான ஒரே தீர்வாகும். தொழில்முனைவில் அரசின் பங்களிப்பு நிச்சயம் கிடையாது. ஆனால், தொழில்முனைவோர்கள் வேலைவாய்ப்புகளையும், முதலீட்டாளர்களுக்கு செல்வத்தையும் உருவாக்கி, வரி கட்டுவதன் மூலம் தேசத்தை கட்டமைக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளேன். உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு மதிப்பு கொடுக்கின்றன. நமது செயல்பாடுகள் நல்ல அங்கீகாரத்தை கொடுக்கும். அந்த அங்கீகாரத்திற்கு மரியாதை கிடைக்கும். அந்த மரியாதை அதிகாரத்தை கொடுக்கும்.எனவே, நமது முன்னோர்களின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். சீன தொழிலாளர்களால் நம்மை விட 3.5 மடங்கு பொருட்களை தயாரிக்க முடியும். முட்டாள்தனமான கருத்துக்களை எழுதிவிட்டு, ஏழைகளாகவும், உலகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் நாம் வாழ்வது எளிது. ஆனால், உங்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து வாழ வேண்டும், இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

என்றும் இந்தியன்
டிச 16, 2024 17:49

நானும் அடைந்த 10 வருடமாக பார்க்கும் வேலை காலை 8 மணிக்கு லேப்டாப் ஆன் செய்வேன் இரவு 11 மணிக்கு தான் அதை மூடுவேன். இதில் 1 1/2 மணி நேரம் கார் ஓட்டுதல்+சாப்பிடுதல் + குளித்தல் + டிவி சீரியல் 1 மணிநேரம் = 4 மணிநேரம் ஆபிஸ் 10.30 முதல் 6 மணிவரை. 15-4 மணினேரம் 11 மணிநேரம் x 7 நாட்கள் = 77 மணிநேரம் வேலை செய்கின்றேன். சம்பளம் எனக்கு 8 மணிநேரத்திற்கு ஹான் கொடுக்கின்றார்கள். அதனால் என்ன??செலவுக்கு வேண்டிய அளவு கிடைக்கின்றது. ஆகவே நாராயண் மூர்த்தி கூறியது சரிதான்


சந்திரசேகர்
டிச 16, 2024 17:03

சில ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் கம்மி.மீதி நேரத்தை குடும்பத்திற்கு செலவு செய்ய சொல்கிறார்கள்.சில நாடுகளில் சனி ஞாயிறு விடுப்பு.எல்லோரும் குடும்பத்தை நேசிக்க சொல்கிறார்கள்.இங்கே ஊழல் செய்யாமல் இருந்தாலே எல்லோரும் சந்தோஷமாக வாழ்வார்கள். ஒரு கடையில் ஆண்கள் பெண்கள் வேலைக்கு சேர்ந்தால் குறைந்த பட்சம் பனிரெண்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள்.ஊதியம் ஏழிலிருந்து பத்தாயிரம் மட்டும்.இவர் சொல்வது அரசு ஊழியர்களையா என்பது தெரியவில்லை.இங்கே வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைக்க வில்லை என்பதே உண்மை


Vijay D Ratnam
டிச 16, 2024 15:31

என்ன சிவகிரி சார், எங்கேர்ந்து சார் வரீங்க. சைனாவை போல லாபங்களை பிரித்து தொழிலாளர்களுக்கு கொடுக்கிறார்களா. இது என்ன புது உருட்டா இருக்கு. கார்ப்பரேட் நிறுவனங்கள் அமேரிக்கா ஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு வருவதே குறைந்த கூலியில் மாடு மாதிரி உழைக்க அடிமைகள் தேவை என்பதால். சீனாவில் தொழில் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே உற்பத்தி, வரி ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என்று ஏகப்பட்ட வரிகள் செலுத்துகிறார்கள், மூலப்பொருட்கள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, காவல், கட்டுமானம் என்று அரசுக்கு பெரியளவில் வரி செலுத்துகிறார்கள். அதற்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலைப்பார்க்கும் கொத்தடிமைகளை சீன அரசு அடிமாட்டு விலைக்கு கொடுக்கிறது. சீனர்கள் பாவம். இந்தியா மாதிரி எதற்கெடுத்தாலும் அங்கே போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் எதுவும் செய்ய முடியாது. வேலை செயறியா, அரசுக்கு வரியை கட்டிட்டு போயிட்டே இரு, அவ்ளோதான். எகிறுனா சாவடிச்சிருவாய்ங்க. டிவில காட்டுற சீனா வேற பாஸ். ரியாலிட்டி வேற. வானத்தில் இருந்து பார்த்தா சோமாலியா கூட அழகாத்தான் தெரியும் பாஸ் .


Raja
டிச 16, 2024 15:26

நான் 70 மணி நேரம் வேலை செய்ய தயார். ஆனால் அதற்கு நீங்கள் நியாயமான சம்பள உயர்வு வழங்க தயாரா? உதாரணமாக, ஒரு கஸ்டமர் Info-க்கு $100 ஒரு மணிநேரத்திற்கு செலுத்தினால், 40 மணி நேரத்தில் Info $4000 சம்பாதிக்கிறது. 70 மணி நேரத்தில், Info $7000 சம்பாதிக்கும், அதாவது $3000 கூடுதல் லாபம். ..இதே முறைப்படி, 40 மணி நேரத்திற்கு ₹20,000 சம்பளம் வழங்கப்படுகிறதானால், 70 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ₹35,000 வழங்கப்பட வேண்டும். இப்போது கேள்வி: நீங்கள் Info-க்கு வரும் இந்த கூடுதல் வருமானத்தைப் பயன்படுத்தி, ஊழியர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்க தயாரா?


RAVINDRAN.G
டிச 16, 2024 14:58

கடுமையாகத்தான் உழைக்கிறோம். அதன் நலனை பலன்களை முதலாளிகளே அனுபவிக்கிறார்கள்.உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் படிகள் இல்லை. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை என்றால் வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல மற்றும் அலுவலகத்தில் இருந்து வீடு செல்ல மொத்தம் 4 மணிநேரம் செலவாகும். வீட்டு வேலை குழந்தைகள் பெரியவர்கள் பராமரிப்பு இதற்கு 5 மணிநேரம் போக மிச்ச நேரம் தான் மனிதனுக்கு ஓய்வு கிடைக்கும். நாராயணமூர்த்தி அவர்களின் வீட்டில் வேலை செய்ய ஆள் இருப்பார்கள் ஆகவே நேரத்தை பற்றி அவர் பேசுவது அறியாமையை காட்டுகிறது. முதலாளிகள் மனிதத்தன்மையோடு இருங்கள். என்றும் தொழிலாளிகள் முதலாளிகள் பக்கமே என்பது என் கறுத்து


Sivagiri
டிச 16, 2024 14:11

சைனாவை உதாரணம் காட்டுபவர்கள் , யாருமே சைனாவை போல லாபங்களை பிரித்து தொழிலாளர்களுக்கு கொடுக்கிறார்களா ? , சைனாவை போல உலகிற்கு குறைந்த விலையில் பொருள்களை கொடுப்பார்களா ? , , இங்கே தொழிலார்களை சுரண்டி குறைந்த செலவில் தாயாரித்து , டபுள் ட்ரிபிள் லாபம் பார்த்த பின்னும் , ஊழியர்கள் சம்பளம் கொஞ்சம் உயர்ந்த உடன் விரட்டி விட்டு , புது ஆளை குறைந்த சம்பளத்தில் போட்டுக் கொள்கிறார்கள் . . . நல்ல காலம் ஈ எஸ் ஐ , பிஎப் எல்லாம் கவர்ன்மெண்ட் கண்ட்ரோலில் உள்ளது . . .


மொட்டை தாசன்...
டிச 16, 2024 12:58

ஒரு நிர்வாகத்தின் தலைமை இயக்குனரிடம் வேறன்ன எதிர்பார்க்கமுடியும் .


Charan Tamil
டிச 16, 2024 12:25

சரியாக சொன்னீர்கள்....


Karthik
டிச 16, 2024 12:05

இந்த நாட்டில் தற்போது குறைந்த படசம் அனைவரும் உலைப்பது 18 மணி நேரம்...அதே போல இங்கு புட்ரீசல் போல Fertility center முளைக்க காரணம் அதிக வேலை பளு...இதற்கு உதாரணம் கொரானா காலத்தில் அதிக அளவில் குழந்தை பெற்று கொண்டனர் இந்தியர்கள்... நாங்கள் கடினமாக நாசமக உழைத்து தான் நீங்களும் நாடும் முன்னேற வேண்டும் என்றால் அபப்டி பட்ட வளர்ச்சியே தேவை இல்லை..!!


தமிழ்வேள்
டிச 16, 2024 11:46

லஞ்சம் வாங்கி குவிப்பதற்காக திருட்டு திராவிடம் வேண்டுமானால் 168 மணிநேரம் -அதாவது 24/7 - வெறிபிடித்து வேலை பார்க்கும் ...மனிதர்களுக்கு அதிகபட்சம் 8 மணிநேரம் மட்டுமே வேலை பார்க்க உகந்தது ........


சமீபத்திய செய்தி