உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு 7வது சம்மன்: அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை

கெஜ்ரிவாலுக்கு 7வது சம்மன்: அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிப்.,26ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத் துறையினர் அனுப்பிய சம்மன்களை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்து வருகிறார். இதை எதிர்த்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால், ''மார்ச் முதல் வாரம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்'' என, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதற்கிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு 6 முறை அனுப்பிய சம்மன்களை கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.இந்நிலையில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிப்.,26ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானவை என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
பிப் 22, 2024 22:28

கெஜ்ரி தேர்தலுக்கு முன் விசாரணைக்கு வரமாட்டார். அதனால் இவருக்கு மனு அனுப்புவதே வீண். தேர்தலுக்கு பின்னர், மனு அனுப்ப வேண்டாம். போலீசை அனுப்பி, வெளுத்துவிடுங்கள். செந்தில் பாலாஜி போன்று நாடகம் போடுவார். ஆனால் எந்த போன் மற்றும் காமெரா இல்லாமல் பார்த்துக்கொண்டு, கைது செய்து ஜெயிலில் தூக்கி போடுங்க.


Kuppan
பிப் 22, 2024 17:25

அமலாக்க துரையின் சம்மன் கெஜ்ரிக்கு ஒரு டிரம்ப் கார்டு, தேர்தல் நேரம் வரை இழுத்தடித்து, ED வேறு வழியில்லாமல் கைது செய்யும் பொது "ஐயோ கொல்லறங்க.. கொல்லறங்க ..." அப்படினு அகில இந்தியா அளவில் சிம்பதி உருவாக்க போறாரு.


Kuppan
பிப் 22, 2024 17:17

கேஜ்ரியின் 7 ஆவது சம்மன், காமகாசனின் கட்சி 7ஆவது வருடம், விடியலின் 7 அம்ச குறிக்கோள்


நரேந்திர பாரதி
பிப் 22, 2024 17:09

கேசரிவாலு ஒரு முடிவோடத்தான் இருக்காப்புல பாப்போம்...என்ன நடக்கப்போவுதுன்னு


Narayanan
பிப் 22, 2024 15:48

இனியும் அமலாக்கத்துறை மெத்தனம் காட்டி அமலாக்கத்துறை அதன் தரத்தை குறைத்துக்கொள்ளவேண்டாம் . அதிரடி கைது ஒன்றே வழி . அமலாக்கத்துறை பயப்படுகிறதா? ஏன் ?


oviya.vijay
பிப் 22, 2024 15:35

சரியான ஆண்மகன். இதனால் தான் மத்திய அரசின் தலைமை என்று பீற்றிக்கொள்ளும் டெல்லியில் கூட பிஜேபி தன் ஆட்சியை அமைக்க முடியவில்லை. supreme கோர்ட்டில் குட்டு வாங்கினால் தான் மத்திய பிஜேபி அரசுக்கு புத்தி வரும்.


duruvasar
பிப் 22, 2024 13:52

நாட்டின் சாபக்கேடு


Akhand Bharat × = INDIA
பிப் 22, 2024 13:34

அமலாக்கத்துறையினரின் அனைத்து சம்மனையும் அலட்சியப் படுத்தும் ஊழல்கெஜ்ரிவாலுக்கு இந்த வாட்டி சுருக்கு வலை வேற மாதிரி போடப் பட்டிருக்கிறது அதனால உறுதியாக இந்த ஊழல் திமிங்கலம் அதிக பட்சம் நாளையோ அல்லது நாளை மறுநாளோ உறுதியா மாட்டும் என்று மிகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Venkatasubramanian krishnamurthy
பிப் 22, 2024 13:01

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புவரை எந்த சம்மனையும் அவர் கண்டுகொள்ள மாட்டார். தேர்தல் நெருக்கத்தில் வலிய கேஜ்ரிவால் ஆஜராவார். அப்போது கைது நடந்தாலும் அதையே அனுதாபத்திற்கு பயன்படுத்த தயங்கமாட்டார். ஊழலை எதிர்த்து இயக்கம் கண்ட கேஜ்ரிவால் இல்லை அவர். இப்போது ஊழல் ருசி கண்ட அழுக்கு படிந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த .... அவர்.


ராஜா
பிப் 22, 2024 12:27

இவனை கவனிக்க வேண்டிய இடத்தில், கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிப்பார்கள்.


A Viswanathan
பிப் 22, 2024 13:19

இதே ஒரு சாதாரன மனிதர் என்றால்ஈடிஏ எத்தனை கொடுமை செய்திருப்பார்கள்.சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது எல்லாம் பொய்.


Barakat Ali
பிப் 22, 2024 13:26

தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு இன்னும் நிதி தேவை ...... கெஜ்ரி ஒழுங்காக கப்பம் கட்டிவிட்டால் விட்டுவிடும் பாஜக ......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை