சட்டவிரோதமாக வசித்த 8 வங்கதேசிகள் கைது
சத்ய நிகேதன்: வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் தொடர்புடைய 38 வயது நபர் உட்பட தென்மேற்கு டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 8 வங்கதேசிகளை போலீசார் கைது செய்தனர்.சத்ய நிகேதன் சந்தைப் பகுதியில் வங்கதேச பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 15ம் தேதி அங்கு சென்ற போலீசார், ரபியுல் இஸ்லாம், 38, என்பவரை கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது மனைவி சீமா, 27, மகன் ஆபிரகாம், 5, பாபியா கதுன், 36, அவரது மகள்கள் சாதியா சுல்தானா, 21, சுஹாசினி, 1, ஆர்யன், 7, ரிபாத் அரா மொய்னா, 28, ஆகிய மேலும் ஏழு வங்கதேசிகள் அடையாளம் காணப்பட்டனர்.இவர்களில் இஸ்லாம், 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவரது மனைவி, 2016ல் சட்டவிரோதமாக வந்துள்ளார்.இவர்கள் அனைவரும், கிஷன்கர், கட்வாரியா சராய் உள்ளிட்ட தென்மேற்கு டில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளனர். 2007 மற்றும் 2023க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் திரிபுரா, கோஜா டோங்கா, பெனாபோல் எல்லைகள் வழியாக தரகர்களின் உதவியுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தனர்.இவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.