உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் காங்.,கில் இணைகின்றனரா?

8 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் காங்.,கில் இணைகின்றனரா?

பெங்களூரு: ''பெங்களூரின் இருவர் உட்பட பா.ஜ.,வின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய உள்ளனர்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரின், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பா.ஜ.,வின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள், விரைவில் காங்கிரசில் இணைவர். இது பற்றி நான் கூறியதால், என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும், எனக்கு பயம் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம்.என் தொகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே, எனக்கு முக்கியம். எனவே முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்கிறேன். யோகேஸ்வரிடம் நன்றாக வேலை வாங்கி கொண்டு, அதன்பின் கைவிட்டு விட்டனர். எனவே அவர் காங்கிரசுக்கு சென்று, சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ